கரூரில் "அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு 




பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து, பள்ளியில் புதிதாக சேரும் குழந்தைகளுக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.




கரூர் கோட்டைமேடு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் "அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்" மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். 


முன்னதாக பள்ளி வளாகத்தில் தொடக்கப் பள்ளிகளில் புதிதாக சேரும் மாணவ, மாணவிகளுக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.




தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 3ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் ஏப்ரல் 17ஆம்தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகிறது. அதன்படி கரூர் மாவட்டத்தின் 46 பள்ளிகளில் இவ்விழிப்புணர்வு பேரணி 19.04.2023 முதல் 28.04.2023 வரை நடைபெறவுள்ளது. இப்பேரணியில் மாவட்ட அளவில் தயார் செய்யப்பட்ட ஒரு வாகனம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான அரசின் நலத்திட்டங்களான எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறை, மன்ற செயல்பாடுகள், காலை உணவு, சத்தான சத்துணவுடன் வாரம் ஐந்து முட்டை வழங்குதல், அரசுப் பள்ளிகளில் தரமான இலவசக்கல்வி ஆகியவை வழங்கப்படுவதை பொதுமக்கள் அனைவரும் அறியும் வண்ணம் பேனர்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் மாணவர்களின் பெற்றோருக்கு தெரியப்படுத்தும் வகையில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளின் அருகில் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள், மக்கள் குடியிருப்புகள் அதிகமுள்ள இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.


சுகாதாரத்துறை பணிகள் குறித்தான ஆய்வுக்கூட்டம் மற்றும் மகப்பேறு மரணம், குழந்தை மரணம் குறித்தான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.


கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(18.04.2023) சுகாதாரத்துறை பணிகள் குறித்தான ஆய்வுக்கூட்டம் மற்றும் மகப்பேறு மரணம், குழந்தை மரணம் குறித்தான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர்  தலைமையில் நடைபெற்றுது.


இக்கூட்டத்தில் உதிரம் உயர்த்துவோம் திட்டத்தில் பரிசோதனை செய்யப்பட்ட 17000 மாணவியர்களுக்கு வரப்பெற்ற முடிவில் Mild, Moderate, Severe Anemia என வகைப்படுத்தி அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தும்,. கரூர் மாவட்டத்தில் நடைபெறும் சிசு மரணம் குறித்த ஆய்வு நடத்தப்பட்டு இறப்பிற்கான காரணங்களை ஆய்வு செய்து அவற்றில் சிசு இறப்பை முற்றிலும் தவிர்க்க மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதேபோல் குழந்தை மரணம் குறித்தும் ஒவ்வொரு குழந்தை பிறந்த பின்பும், பிரசவகால பின் கவனிப்பு 48 நாட்கள் வரை கட்டாயம் கிராம சுகாதார செவிலியர்களால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.


குழந்தைகளுக்கு பிறப்பிலேயே ஏற்படும் நோய்கள் கண்டறிதல் பற்றி ஆய்வு செய்து பிறவி காதுகேளாமை போன்ற நோய்கள் கண்டறிதல் துரிதமாக கண்டறிய வேண்டும்.மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு, எல்லா மருத்துவமனைகளிலும் குறைந்தது 3 மாத இருப்புகள் இருப்பதை அந்தந்த மருத்துவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.. மேலும் காய்ச்சல் மற்றும் டெங்கு பணிகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு, வரும்காலங்களில் காய்ச்சல் மற்றும் டெங்குவினால் தீவிர நோய் பரவல் ஏற்படாவண்ணம் இருக்க வேண்டும்.. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்படும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். தொற்றா நோய்கள் கண்டறிவது மற்றும் மக்களை தேடி மருத்துவம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, இதில் கண்டறியும் விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும். 


இரண்டுக்கும் மேற்பட்ட நலமுடன் வாழக்கூடிய குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் மற்றும் தந்தையர்களுக்கு ஒரு சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடத்தி அதில் குடும்ப நல அறுவை சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கருவுற்ற தாய்மார்களுக்கு இரத்தசோகையினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து அவற்றை சரி செய்வது குறித்து ஆலோசனைகள் வழங்க வேண்டும்


தற்போது பரவிவரும் கொரோனா தொற்று குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மாவட்டத்தில் உள்ள படுக்கை வசதிகள், ஆக்ஜிசன் இருப்பு மற்றும் தேவையான மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்., தொற்று இருப்பவர்களின் உறவினர்கள் மற்றும் தொடர்பில் உள்ளவர்களுக்கும் சளி மாதிரிகள் எடுத்து கொரோனா பரிசோதனை செய்யவும் மேலும், அதிகப்படியான சளி தடவல் மாதிரிகள் எடுத்து கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் மேலும் பொது இடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர்.இ.ஆ.ப.. அவர்கள் மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.


இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) மரு.ரமாமணி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.சந்தோஷ்குமார்,  கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வர்(பொ) மரு.ராஜர மற்றும் மருத்துவ அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.