கரூர் மாவட்டத்தில் இன்று 11,377 பேர் பொது தேர்வு எழுதுகின்றனர். மேலும், 51 தனி தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.


 


 






கரூர் மாவட்டத்தில் 43 தேர்வு மையங்களில் 5503 மாணவர்களும், 5874 மாணவிகளும்,  என மொத்தம் 11,377 பேர் 12கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் மாணவ, மாணவிகள்  தேர்வரைக்குள் அனுமதிக்கப்பட்டு, ஹால் டிக்கெட் கொடுக்கப்பட்டு அமர வைக்கப்பட்டனர். முன்னதாக தேர்வரை கண்காணிப்பாளர்கள் உரிய பரிசோதனை நடத்திய பின்னரே மாணவர்களை உள்ளே அனுமதித்தனர். மேல்நிலைப் பொதுத் தேர்வு நடைபெறும் மையங்களில் முதன்மை கண்காணிப்பாளர்களாக 46 தலைமை ஆசிரியர்களும், 46 துறை அலுவலர்களும், அறை கண்காணிப்பாளர்களாக, 793 ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் விதமாக 91 பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


 




கரூரில் 11,377 மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். தடையில்லா மின்சாரம் வழங்க மின்சார வாரியத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கூறினர். கரூரில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர்:


 




கரூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 11,377 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் தேர்வு எழுத தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுத்தேர்வின் போது பள்ளி மாணவ, மாணவிகள் தடையின்றி மின்சாரம் வழங்க மின்சார வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, போக்குவரத்து வசதிகள் போதுமான அளவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு சமயத்தில் அதிக ஒலி சத்தத்தை எழுப்புவதை தடுக்க பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண