மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 75-வது பிறந்த நாள் பொது கூட்டம் மதுரை ஆரப்பாளையம்  அருகே கிராஸ் ரோட்டில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மேடையில், "தி.மு.க., ஆட்சியினாலே கொடுமை தான். நேற்றைய தினம் ஒரு விரும்ப தகாத நிகழ்வு. எதிர் கட்சித் தலைவரை ஒருமையில் பேசுகிறான். சிங்கப்பூரில் இருந்து போதையில் வந்தவன் ஒருமையில் பேசினான். இந்த தி.மு.க., ஆட்சியில் சட்ட ஒழுங்கு மிக கேவலமாக உள்ளது. காவலருக்கே பாதுகாப்பு இல்லை. தி.மு.க., கூட்டத்தில் காவல் காக்கும் பெண் காவலரையே சில்மிஷம் செய்தான் ஒருவன். 3 நாள் மவுனம் காத்தது இந்த அரசு. இது பெட்டி அரசு என மக்கள் கேலி கிண்டல் செய்கிறார்கள். இதே போல நேற்று எதிர்க்கட்சி தலைவர் விமானத்தில் இருந்து இறங்கி விமான நிலையத்தில் அங்குள்ள பேருந்தில் ஏறி நிற்கும் போது ஒருமையில் பேசினான். காந்தியாக இருந்தாலும் கூட அடித்திருப்பார். அதையும் காட்டிலும் பொறுமையாக இருந்தார்.



அவன் மீது புகார் கொடுக்க எடப்பாடியர் சொன்னார். உடனே புகார் கொடுத்தால் வழக்கு பதிந்து இருக்க வேண்டும். வழக்கு பதிவு செய்யவில்லை. அவன் கொடுத்த புகாருக்கு வழக்கு போடுகிறார்கள். எங்கள் தலைவர் அடித்த வீடியோ இருக்கிறதா? வெளியே வர முடியாத செக்க்ஷன் போட்டுள்ளீர்கள். இது கையாலாகாத தி.மு.க., அரசை காட்டுகிறது. இந்த அரசை கண்டித்து பழங்காநத்தம் அருகே  3 மாவட்ட செயலாளர்களும் சேர்ந்து மிக பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். தமிழ் நாடு முழுவதும் அதிமு போராட்டம் நடத்தினால் என்னவாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற வக்கில்லாத இந்த அரசு எதிர்க்கட்சி மீது பொய் வழக்கு போடும் இந்த அரசை விட்டு வைக்கலாமா? அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த அத்தனை திட்டத்திற்கும் மூடு விழா வைத்து விட்டீர்கள். சொகுசாக வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஏழை படும் கஷ்டம் தெரியுமா?  எதிர்க்கட்சி தலைவர் மீது வழக்கு போடுவதை பார்த்து கொண்டு 'சும்மா இருப்பார்களா அ.தி.மு.க., தொண்டர்கள்.



 

உனது மகன் என்று செங்கலை தூக்கினாரோ அன்றையில் இருந்து அத்தனை கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. கள ஆய்வுக்கு மதுரைக்கு வந்தாரே கள ஆய்வு என்கிற பெயரில் அறைக்குள்ளே நடத்திவிட்டு சென்றாரே? ஏதும் நடந்ததா? இதுக்கு சென்னையில் கோட்டையிலே பேசியிருக்கலாமே. மதுரை - நத்தம்பாலம் கட்டி வருவதை அதிகாரியுடன் ஆய்வு செய்தீர்களா? ஸ்மார்ட் திட்டம் நடைபெற்று வருவதை ஆய்வு செய்தீர்களா?  சும்மா அதிகாரிகளுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு சென்றீர்கள். நாடு பதட்டமான சூழ்நிலையில் உள்ளது என 'கமல் பேசிட்டு போனார். ஈரோடு கிழக்கு தொகுதியில். ஒரு நாளில் பதட்டத்தை தனிச்சிட்டார். அவரையே ஆயிரம் ரூபாய் கொடுத்து தான் கூட்டிட்டு வந்துள்ளனர்” என்று காட்டமாக பேசினார்.



 







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண