JNV Result 2025: ஜவஹர் நவோதயா நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?

JNV Class 6th, 9th Result 2025: 6, 9ஆம் வகுப்புகள் மாணவர் சேர்க்கைக்கு ஜவஹர் நவோதயா வித்யாலயா தேர்வு (JNVST) நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது

Continues below advertisement

JNV Class 6th, 9th Result 2025 Declared: 6 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கான ஜேஎன்வி எனப்படும் ஜவஹர் நவோதயா வித்யாலயா நுழைவுத் தேர்வு முடிவுகளை ஜவஹர் நவோதயா சமிதி வெளியிட்டுள்ளது. மாணவர்கள், நவோதயா இணையதளத்தில் மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ளலாம். navodaya.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

முன்னதாக 6ஆம் வகுப்புக்கான தேர்வு ஜனவரி 18ஆம் தேதி நடைபெற்ற நிலையில், 9ஆம் வகுப்புக்கான நுழைவுத் தேர்வு பிப்ரவரி 8ஆம் தேதி நடந்தது. இந்த முடிவுகளே தற்போது வெளியாகி உள்ளன.

தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

  • ஜவஹர் நவோதயா சமிதியின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbseit.in அல்லது navodaya.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
  • அதில், result 2024 இணைப்பை தேர்வு செய்யவும்.
  • நவோதயா 6 மற்றும் 9 வகுப்புகளின் முடிவுகள் திரையில் தோன்றும்.
  • அதை சேமித்து, வருங்காலத் தேவைக்கான சேமித்து வைத்துக்கொள்ளவும்.

என்னென்ன ஆவணங்கள் தேவை?

மாணவர் சேர்க்கைக்கு கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் அவசியம். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட ஜேஎன்விக்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

– வசிப்பிடச் சான்றிதழ்

–தகுதிச் சான்றுகள்

– பிறப்புச் சான்றிதழ்

– SC, ST மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கான சாதிச் சான்றிதழ்

– மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கான ஊனமுற்றோர் சான்றிதழ் 

இந்தியா முழுவதும் 1986ஆம் ஆண்டு ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் ( Jawahar Navodaya Vidyalayas - JNVs) ஆரம்பிக்கப்பட்டன. நாடு முழுவதும் 27 மாநிலங்களிலும் 8 யூனியன் பிரதேசங்களிலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. மத்திய அரசின் நவோதயா வித்யாலயா சமிதி (Navodaya Vidyalaya Samiti) சார்பில், இந்தப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆண், பெண் என இரு பாலரும் சேர்ந்து படிக்கும் உறைவிடப் பள்ளிகள் இவை. மத்திய அரசே இந்தப் பள்ளிகளுக்கு முழுமையாக நிதி அளிக்கிறது.

6, 9ஆம் வகுப்புகள் மாணவர் சேர்க்கைக்கு ஜவஹர் நவோதயா வித்யாலயா தேர்வு (JNVST) நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

கூடுதல் தகவல்களுக்கு: 011-40759000 / 011-69227700 

இ-மெயில் முகவரி: nvsre.nt@nta.ac.in

Continues below advertisement
Sponsored Links by Taboola