2024ஆம் ஆண்டுக்கான பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. மதிப்பெண்களை எப்படித் தெரிந்துகொள்வது என்று பார்க்கலாம்.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் சேர ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என்று பிரித்து நடத்தப்படுகிறது.
ஜனவரி 24ஆம் தேதி தொடங்கிய தேர்வு
2024ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதல் அமர்வு தேர்வுகள் ஜன.24ஆம் தேதி தொடங்கின. குறிப்பாக தாள் 2ஏ மற்றும் தாள் 2பி ஆகியவற்றுக்கான தேர்வுகள் காலை 9 முதல் 12 மணி வரையும் பிற்பகல் 3 முதல் 6 மணி வரையும் தேர்வுகள் நடைபெற்றன.
இதில் தாள் 2 ஏ தேர்வுகள், தாள் 2பி-ல், பி.ஆர்க். மற்றும் பி.பிளானிங் தேர்வுகள் மதியம் 3 முதல் 6 மணி வரை நடைபெற்றன. இந்தத் தேர்வுகள் ஜனவரி 27, 29, 30, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. நாடு முழுவதும் 291 நகரங்களில், 544 தேர்வு மையங்களிலும் இந்தியாவுக்கு வெளியே 21 நகரங்களிலும் தேர்வுகள் நடைபெற்றன.
2 முறைகளில் தேர்வு
தாள் 2ஏ தேர்வுகள் இரண்டு முறைகளில் 13 மொழிகளில் நடைபெற்றன. கணிதம் மற்றும் திறன் சார்ந்த தேர்வுகள் கணினி மூலமாகவும் ட்ராயிங் தேர்வுகள் பேனா- காகித முறையிலும் நடைபெற்றன. பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு நடத்தப்படும் முதல் தாளை, 11.70 லட்சம் மாணவர்கள் எழுதினர். பி.ஆர்க் மற்றும் பி.பிளானிங் படிப்புகளுக்கு நடத்தப்பட்ட இரண்டாவது தாளை மொத்தம் 55,493 தேர்வர்கள் எழுதினர்.
இந்த நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. நாடு முழுவதும் 23 தேர்வர்கள் நூற்றுக்கு நூறு பர்சன்டைலைப் பெற்றுள்ளனர்.
காண்பது எப்படி?
* தேர்வர்கள் https://jeemain.ntaonline.in/frontend/web/scorecard/index என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளைக் காணலாம்.
* அதில், விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு குறியீட்டு எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
* அதைத் தொடர்ந்து சப்மிட் பொத்தானை க்ளிக் செய்தால், தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.
இதில் முதல் 2.5 லட்சம் இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள், ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்குத் தகுதி பெறுவர்.
கூடுதல் தகவல்களுக்கு: https://jeemain.nta.nic.in/
தொலைபேசி எண்: 011- 40759000
இ- மெயில்: jeemain@nta.ac.in