JEE Main 2024: ஜேஇஇ மெயின் தேர்வு; விண்ணப்பிக்க நாளை கடைசி - எப்படி?

ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு நவ. 2ஆம் தேதி முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. மாணவர்கள் விண்ணப்பிக்க நாளை (நவம்பர் 30ஆம் தேதி) கடைசி என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

Continues below advertisement

2024ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (நவ. 30) கடைசித் தேதி ஆகும். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம். 

Continues below advertisement

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் சேருவதற்கு  ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என்று பிரித்து நடத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் இந்தத் தேர்வு நடத்தப்படும் நிலையில், நுழைவுத் தேர்வு தொடர்பான அறிவிப்பை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டது. 

நாளை கடைசி

இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு நவ. 2ஆம் தேதி முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. மாணவர்கள் விண்ணப்பிக்க நாளை (நவம்பர் 30ஆம் தேதி) கடைசி என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம். 

விண்ணப்பிப்பது எப்படி?

* தேர்வர்கள் https://jeemain.nta.nic.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 

* அதில் JEE Main 2024 registration என்ற பகுதியை க்ளிக் செய்ய வேண்டும். 

* அதில் தேவையான தகவல்களை உள்ளிட்டு, லாகின் செய்யவும். 

* அதில் விண்ணப்பப் பதிவை மேற்கொண்டு, தேவையான ஆவணங்களை உள்ளிட்டு பதிவேற்றம் செய்யவும். 

12 மொழிகளில் தேர்வு எழுதலாம்

JEE Main எனப்படும் நுழைவுத் தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மொழிகள் தாண்டி பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது. 

75 சதவீத மதிப்பெண்கள் அவசியமில்லை

முன்னதாக ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வை எழுத 12ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று என்டிஏ அறிவித்திருந்தது.  இந்த நிலையில், குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதியைத் தற்போது என்டிஏ நீக்கியுள்ளது. ’அனைத்துக் கல்வி வாரியங்களிலும் முதல் 20 சதவீத (percentile) மாணவர்கள், 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டியதில்லை’ என்று என்டிஏ தெரிவித்தது.

10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் தேவையில்லை

2024ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து வரும் நிலையில், தேர்வுகளை நடத்தும் என்டிஏ, தமிழ்நாடு மாணவர்களுக்காக விதிகளைத் தளர்த்தி உள்ளது. இதன்படி, 2021ஆம் ஆண்டு 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வெழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் பக்கம், செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது (disabled) குறிப்பிடத்தக்கது.

கூடுதல் விவரங்களுக்கு: https://jeemain.nta.nic.in/

தொலைபேசி எண்: 011-40759000 

இ- மெயில் முகவரி: jeemain@nta.nic.in

Continues below advertisement
Sponsored Links by Taboola