2023ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வு முதல் அமர்வுத் தேர்வுகள் ஜனவரி 24ஆம் தேதி தொடங்கும் நிலையில், ஹால் டிக்கெட் இன்று வெளியாகி உள்ளது. 

Continues below advertisement

ஜே.இ.இ.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது. 

Continues below advertisement

இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இந்த தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட இருக்கிறது. பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.  

இணையதளம்

இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது.  2023ஆம் ஆண்டு ஜேஇஇ தேர்வின் முதல் அமர்வு (session 1) ஜனவரி 24 முதல் 31 ஆம் தேதி வரை (26ஆம் தேதி நீங்கலாக) நடைபெற உள்ளது. இரண்டாவது அமர்வு ஏப்ரல் மாதத்தில் 6, 8, 10- 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 

 அமர்வுகளில் எதில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ, அதைக் கொண்டு மாணவர்கள்  தரவரிசைப்படி கல்லூரிகளில் சேரலாம். அதேபோல, கேட்கப்படும் 90 கேள்விகளில் 75 கேள்விகளுக்கு விடையளிக்க முயல வேண்டும். இரண்டாவது அமர்வுக்காக விண்ணப்பப் படிவங்கள் மார்ச் மாதத்தில் வெளியாக உள்ளன. இதற்கிடையே முதல் அமர்வுக்கு, மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்தனர். 

 

இந்த நிலையில் முதல் அமர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது.

ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?

jeemain.nta.nic.in என்ற இணைய பக்கத்தை க்ளிக் செய்யவும்.

* JEE Main session 1 admit card என்ற இணைப்பைத் திறக்கவும்.

* தேர்வர்கள் https://examinationservices.nic.in/jeemain23/downloadadmitcard/LoginDOB.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFVj34FesvYg1WX45sPjGXBr0Q5J+bY568shjFzDVpD98 என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.* விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைக் கொண்டு லாகின் செய்யவும்.* தகவல் பலகை திறக்கப்பட்ட உடனே, ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

கூடுதல் தகவல்களுக்கு: jeemain.nta.nic.in

தேர்வை ஒத்திவைக்காத என்டிஏ

ஜனவரி மாத அறிவிப்பை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்ட நிலையில் இதற்கு மாணவர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தனர். குறிப்பாக JEEAfterBoards என்பன உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்டாகின. எனினும் தேசியத் தேர்வுகள் முகமை தேர்வைத் தள்ளி வைக்காதது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்கலாம்: IIT Madras BharOS: முழுக்க முழுக்க‌ உள்நாட்டுத்‌ தொழில்நுட்பத்திலேயே மொபைல்‌ இயங்குதளம்; சென்னை ஐஐடி அசத்தல் https://tamil.abplive.com/education/iit-madras-developed-made-in-india-mobile-operating-system-bharos-know-more-details-97336/amp

இதையும் வாசிக்கலாம்: TNPSC Group 3 Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு; டவுன்லோட் செய்வது எப்படி? https://tamil.abplive.com/education/tnpsc-group-3-hall-ticket-2023-released-check-how-to-download-admit-card-97342/amp