ஐஐடி சென்னையின்‌ தொழில்‌ ஊக்குவிப்பு நிறுவனம், முழுக்க முழுக்க‌ உள்நாட்டுத்‌ தொழில்நுட்பத்திலேயே‌ ஆத்ம நிர்பார்‌ மொபைல்‌ இயங்குதளத்தை உருவாக்கி உள்ளது.


ஐஐடி சென்னையின்‌ தொழில்‌ ஊக்குவிப்பு நிறுவனம்‌, இந்தியாவில்‌ மொபைல் போன்‌ வைத்திருக்கும்‌ 100 கோடிப்‌ பேர்‌ பயன்பெறும்‌ வகையில்‌ உள்நாட்டு தொழில்நுட்பத்திலான மொபைல்‌ இயங்குதளம்‌ ஒன்றை உருவாக்கியுள்ளது. 'BharOS' என்று அழைக்கப்படும்‌ இந்த மென்பொருளை கடைகளில்‌ விற்பனை செய்யப்படும்‌ மொபைல் போன்களில்‌ நிறுவ முடியும்‌. இது பயனர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதுடன்‌, ஆத்மநிர்பார்‌ பாரத்‌துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாக இருக்கும்‌.


ரகசியத்‌ தகவல்‌ தொடர்புகள்‌ தேவைப்படும்‌ இடங்களில்‌ முக்கிய தகவல்களைப்‌ பயனர்கள்‌ கையாளும்‌ நோக்கில்‌, தனியுரிமை மற்றும்‌ பாதுகாப்புத்‌ தேவைகளைக்‌ கொண்ட நிறுவனங்களுக்கு பரோஸ் சேவை (BharOS Service) தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதன்‌ பயனர்கள்‌ மொபைல்போன்களில்‌ வரையறுக்கப்பட்ட செயலிகளில்‌ ரகசியத்‌ தகவல்தொடர்புகள்‌ தேவைப்படும்போது அவற்றைக்‌ கையாள இந்த
இயங்குதளத்தைப்‌ பயன்படுத்துகின்றனர்‌. 


இதன்‌ பயனர்கள்‌ தனியார்‌ 5ஜி நெட்வொர்க்‌ மூலம்‌ தனியார்‌ கிளவுட்‌ சேவைகளை அணுக வேண்டியிருக்கும்‌. ஐஜடி பிரவர்த்தக்‌ டெக்னாலஜிஸ்‌ பவுண்டேஷனின்‌ (IIT Madras Pravartak Technologies Foundation) தொழில் ஊக்குவிப்பு நிறுவனமான ஜண்ட்கே ஆபரேஷன்ஸ்‌ லிமிடெட்‌ (JandK Operations Private Limited -JandKops) 'BharOS' இயங்குதளத்தை உருவாக்கியுள்ளது. 


ப்ரவர்த்தக்‌ டெக்னாலஜிஸ்‌ பவுண்டேஷனுக்கு பல்துறை சார்ந்த இணையம்‌ மற்றும்‌ அதனைப்‌ பயன்படுத்துவோருக்கான தேசிய இயக்கத்தின்‌ கீழ்‌ (National Mission on Interdisciplinary Cyber-Physical Systems -NMICPS) இந்திய அரசின்‌ அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பத்‌ துறை நிதியுதவி அளித்து வருகிறது. அத்தகைய திறன்களைக்‌ கொண்ட சில நாடுகளுக்கு இணையாக இந்தியாவை திகழச்‌ செய்வதே இந்த இயக்கத்தின்‌ நோக்கமாகும்‌.




இந்திய மொபைல்‌ இயங்குதளம்‌ குறித்துப்‌ பேசிய ஐஜடி மெட்ராஸ்‌ இயக்குநர்‌ வி.காமகோடி, ""BharOS Service என்பது நம்பிக்கையின்‌ அடிப்படையில்‌ உருவாக்கப்பட்ட மொபைல்‌ இயங்கு தளம். அதிக சுதந்திரம்‌, கட்டுப்பாடு, நெகிழ்வுத்‌ தன்மை ஆகியவற்றைப்‌ அளிப்பதுடன்‌. பயனர்கள்‌ தங்களுக்குத்‌ தேவை எனச்‌ கருதும்‌ செயலியை மட்டுமே பயன்படுத்துவது என்பதில்‌ கவனம்‌ செலுத்தப்பட்டு உள்ளது. பயனர்கள்‌ தங்கள்‌ மொபைல
சாதனங்களில்‌ பாதுகாப்பு மற்றும்‌ தனியுரிமை இருப்பதை உறுதிப்படுத்தும்‌ விதத்தில்‌ திருப்புமுனையாக இந்த இயங்குதளம் அமைக்கப்பட்டு உள்ளது" என்று‌ காமகோடி தெரிவித்தார்‌.


என்ன சிறப்பம்சம்?


BharOS இயங்குதளத்துடன்‌ எந்தவொரு நிலையான செயலிகளும்‌ இருப்பதில்லை. பயனர்கள்‌ தங்களுக்கு அறிமுகமில்லாத அல்லது நம்பிக்கை இல்லாத செயலிகளைப்‌ பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்துவதில்லை என்பதுதான்‌ இதன்‌ பொருள்‌. அத்துடன்‌ பயனர்கள்‌ தங்கள்‌ மொபைல்‌ சாதனங்களில்‌ உள்ள செயலிகளுக்கு அனுமதி அளிப்பதில்‌ கூடுதல்‌ கட்டுப்பாடுகளையும்‌ வைத்கிருக்க முடியும்‌. தங்களுக்கு நம்பிக்கையான
எந்தெந்த செயலிகளை அனுமதிக்கலாம்‌, எந்தெந்த அம்சங்கள்‌ அல்லது தரவுகளை வைத்துக்‌ கொள்ளலாம்‌ என்பதை பயனர்களே முடிவு செய்து கொள்ளலாம்‌.