JEE Advanced Registration: தொடங்கிய ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு விண்ணப்பப் பதிவு; மே 7 கடைசி

என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி.களில் பொறியியல் படிப்பில் சேர நடத்தப்படும் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Continues below advertisement

என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி.களில் பொறியியல் படிப்பில் சேர நடத்தப்படும் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க மே 7 கடைசித் தேதி ஆகும். 

Continues below advertisement

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு (மெயின்ஸ்), முதன்மைத் தேர்வு (அட்வான்ஸ்டு) என்று பிரித்து நடத்தப்படுகிறது. ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அட்வான்ஸ்டு தேர்வை எழுதத் தகுதியானவர்கள். அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகிய கல்வி நிறுவனங்களில் இடம் ஒதுக்கப்படுகிறது. 

இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இந்த தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட இருக்கிறது. இவை தாண்டிய பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29ஆம் தேதி வெளியாகின. இதையடுத்து, ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. முதல் நாள் காலி 9 முதல் 12 மணி வரையும் இரண்டாவது தாள் மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

மே 7ஆம் தேதி கடைசி

தேர்வர்களின் வசதிக்கு ஏற்ப, ஜே.இ.இ. தேர்வு ஆண்டுதோறும் நான்கு  கட்டங்களாகத் தேசியத் தேர்வுகள் முகமையால் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்வுக்கு  விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மே 7ஆம் தேதி கடைசித் தேதி ஆகும். அன்று மாலை 5 மணி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். 

மாணவர்கள் jeeadv.ac.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை மே 29 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வு நடைபெறும் நாளான ஜூன் 4ஆம் தேதி வரை ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்யலாம். 

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

இந்தத் தேர்வுக்கு ரூ.2,900 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளித் தேர்வர்கள் இதில் பாதி மட்டும் செலுத்தினால் போதும். அதாவது ரூ.1,450 தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த பெண் தேர்வர்களும் ரூ.1,450 செலுத்தினால் போதும். 

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் விண்ணப்பிக்க: https://jeeadv.nic.in/applicant என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். தேவையான தகவல்களை உள்ளிட்டு விண்ணப்பிக்கலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola