திரைப்பிரபலம் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் 35ஆவது பிறந்த நாளன்று அவரது புகைப்படங்களை சர்பிரைஸாக பகிர்ந்து தந்து வாழ்த்துக்களைத் அவரது கணவர் விராட் கோலி.இதற்கு அனுஷ்கா ஷர்மா அளித்துள்ள பதில் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


பாலிவுட்டின் மிகவும் பிரலபமான மற்றும் திறமைவாய்ந்த நடிகையான அனுஷ்கா ஷர்மா இன்று தனது 35 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். பாலிவுட் திரைப் பிரபலங்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அனுஷ்கா ஷர்மாவின் கணவர் மற்றும்  முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவரான விராட் கோலி தனது மனைவிக்கு மிகவும் ரசிக்கக் கூடிய வகையில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது இணையத்தளத்தில் அனைவரது மனதையும் கவர்ந்து வருகிறது. விராட் மற்றும் அனுஷ்கா ஆகிய இருவரும் எடுத்துக்கொண்ட விடுமுறை தினப் புகைப்படங்களை தனது இன்ஸ்டா ஐடியில் பகிர்ந்து அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் விராட் கோலி,இந்த புகைப்படங்கள் இதுவரை எந்த இணையதளத்திலும் வெளியாகதவை என்பது குறிப்பிடத்தக்கது.


”என்னுடைய எல்லாவுமானவளுக்கு பிறந்தாள் வாழ்த்துக்கள்” என்று விராட் கோலி பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களில் அனுஷ்கா ஷர்மாவின் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகிறார். தனது கணவரின் இந்த வாழ்த்திற்கு எளிமையான வகையில் சிவப்பு ஹார்ட் விட்டு பதிலளித்துள்ளார் அனுஷ்கா ஷர்மா.


நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோலி கடந்த 2017 ஆம் ஆண்டு  டிசம்பர் 11 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள்.  20121 ஆம் அண்டு ஜனவரி 11யில் இவர்களுக்கு முதல் பெண் குழந்தை பிறந்தது. தனது மகளுக்கு வாமிகா எனப் பெயரிட்டனர் இந்த தம்பதியினர். தற்போது நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் பெங்களூர் அணி சார்பாக விளையாடி வருகிறார். இதனால் அனுஷ்கா விராட் ஆகிய இருவரும் பெங்களூரை சுற்றிப் பார்த்து வரும் வீடியோக்களை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்கள். அண்மையில் இந்த தம்பதியினர் பெங்களூரில் உள்ள ஒரு டென்னிஸ் மைதானத்திற்கு திடீரென்று வருகை தந்து  அங்கிருந்த ஒரு தம்பதியினருடன் டென்னிஸ் விளையாடியது இணையதளத்தில் வைரலானது. இதற்கடுத்து தென் இந்திய உணவு வகைகளை தேடி தேடி சாப்பிட்ட வீடியோ. பெங்களூர் அணி போட்டியின் போது அனுஷ்கா ஷர்மா தவறாமல் சென்று தஙகளது அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்,






 


அனுஷ்கா ஷர்மா தற்போது புகழ்பெற்ற இந்திய பந்துவீச்சாலரான ஜுலான் கோஸ்வாமியின் சுயசரிதையான சக்தே எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ப்ரோசித் ராயால் இயக்கப்படுகிறது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப் படவிருக்கிறது. மேலும் இந்த படம் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அனுஷ்கா ஷர்மாவின் சகோதரர் கர்னேஷ் ஷர்மா இந்த படத்தை தயாரித்துள்ளார்.