ஆன்லைன் வகுப்புகளால் மிகந்த சிரமப்படுவதாக ஜம்மு-காஷ்மீர் சிறுமி மஹிர் இர்பான், பிரதமரிடம் புகார் அளித்ததையடுத்து, இரண்டு அமர்வுகளுக்கு 90 நிமிடங்களுக்கு மிகாமல் இணையம் மூலம் வகுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜம்மு- காஷ்மீர் துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
காஷ்மீரைச் சேர்ந்த அந்த சிறுமி அந்த வீடியோவில், “எனது ஆன்லைன் வகுப்புகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணிவரை தொடர்கிறது. ஆங்கிலம், கணிதம், உருது மற்றும் சுற்றுச்சூழல் கல்வி அதற்கு பின்னர் கணினி வகுப்புவரை நடத்துகின்றனர். குழந்தைகளுக்கு நிறைய வேலை இருக்கிறது. சிறிய குழந்தைகள் ஏன் இவ்வளவு வேலைகளை சமாளிக்க வேண்டும்? என்ன செய்ய முடியும் மோடி ஐயா?” என தனது பிஞ்சுமொழிப் பேச்சால் விரக்தியுடன் பேசினார்.
இந்த காணொளி ட்விட்டர், ஃபேஸ்புக், கிளப்ஹவுஸ் போன்ற சமூக ஊடங்களில் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில், நேற்று ஜம்மு& காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வகாம் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுவதற்கான வழிமுறைகளை வெளியிட்டது.
நேற்றைய வழிமுறைகளில்,"1 முதல் 8 முதன்மைப் பிரிவுகளுக்கு இணைய வகுப்புகள், அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு இரண்டு அமர்வுகளுக்கு மேல் வகுப்புகள் நடைபெறாது. 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு இணையம் மூலம் தலா 30-45 நிமிடங்களுக்கு நான்கு அமர்வுகளுக்கு மேல் நடத்தப்படக்கூடாது" என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, ட்விட்டர் வலைதளத்தில் மஹிர் இர்ஃபான் விடியோவை பகிர்ந்து கொண்ட ஜே & கே துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா," மிகவும் அபிமான கோரிக்கை. அடுத்த, 48 மணிநேரத்துக்குள், சிறார்களின் பாடச்சுமைகளை குறைக்க கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். குழந்தை பருவத்தின் அப்பாவித்தனம் கடவுளின் பரிசு. அவர்களின் நாட்கள் கலகலப்பும், ஆனந்தமும் நிறைந்ததாக இருக்கவேண்டும்" என்று பதிவிட்டார்.
கொரோனாவிற்கு பிந்தைய பாதிப்பு ; மத்திய அமைச்சர் ரமேஷ் மருத்துவமனையில் அனுமதி
ஜம்மு- காஷ்மீர் ஊரடங்கு:
வரும் ஜூன் 15-ஆம் தேதி வரை ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இரவு நேர ஊரடங்கும்,ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கும் இருக்கும். இந்த ஊரடங்கு நாட்களில், அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு- காஷ்மீரில் தற்போது 32,000-க்கும் அதிகமானோர் கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், அதிகபட்சமாக ஜம்மு மாவட்டத்தில் 5,329 பேரும், ஸ்ரீநகர் மாவட்டத்தில் 4,057 பேரும் சிகிச்சையில் உள்ளனர். மேலும், அங்கு புதிய பாதிப்புகளை விட புதிதாக குணமடைபவர்களின் எண்ணிக்கை கடந்த 19 நாட்களாக அதிகரித்துவருகிறது.
Corona Unlock Criteria:70 சதிவிகித தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களில் தளர்வு வழங்க முடிவு