தமிழ்நாட்டில் உள்ள ஐடிஐ எனப்படும் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-2025 ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அக்டோபர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 


தொடர்ந்து நீட்டிக்கப்படும் மாணவர் சேர்க்கை


வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் ஐ.டி.ஐ. பயிற்சி நிலையங்களில் 2024-2025 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த மே மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.


தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், தொழிற்பயிற்சி நிலையங்களில் ஐடிஐ பயிற்சியாளர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மீண்டும் அக்டோபர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 


என்ன தகுதி?


தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு சார்பில் 102 நிலையங்கள், 305 தனியார் நிலையங்கள் உள்ளன. 


தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். படிப்பில் சேர பயிற்சிக் கட்டணம் கிடையாது. எனினும் பயிற்சிக்கான கருவிகள், சீருடைகள், மிதிவண்டி மற்றும் இலவச மதிய உணவு வழங்கப்படும். 






விண்ணப்பிக்கும் முறை


மாணவர்களின் விண்ணப்பங்கள் www.skiltraining.In.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 


இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள், தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 136 உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 


தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைகான விண்ணப்பித்தினை பூர்த்தி செய்வதில் ஐயம் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய எண் அலைபேசி எண்‌ மற்றும்‌ whatsapp எண்‌: 9499055689


itiadmission2024@gmail.com - என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.