டிஎன்பிஎஸ்சி டிப்ளமோ, ஐடிஐ ஆகிய தகுதியிலான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி எந்த பாடத்துக்கு எந்த நாளில் தேர்வு என்று பார்க்கலாம்.


டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம், போட்டித் தேர்வுகள் மூலம் அரசு காலிப் பணியிடங்களுக்கு தகுதியான ஆட்களைத் தேர்வு செய்து கொடுக்கிறது. இந்த நிலையில், ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான (ஐடிஐ, டிப்ளமோ லெவல்) பணியிடங்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியானது.


எந்தப் பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு?


இதற்கு டிப்ளமோ, ஐடிஐ படிப்புகளைப் படித்தவர்கள் ஆக. 13ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். இதில் தொழில்நுட்ப உதவியாளர், சர்வேயர் மற்றும் உதவியாளர் வரைவாளர், டெக்னீஷியன், உதவி ஆய்வாளர், விடுதி கண்காணிப்பாளர், உடற்பயிற்சி அதிகாரி, ஜூனியர் வரைவு அதிகாரி, மோட்டார் வாகன ஆய்வாளர், உதவி திட்டமிடுதல் அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வர்கள் விண்ணப்பித்தனர்.


இந்தத் தேர்வு 2 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 


* எழுத்துத் தேர்வு


* சான்றிதழ் சரிபார்ப்பு


முதல் தாளாக தமிழ் மொழி தகுதித் தேர்வு (Tamil Eligibility Test), பொது அறிவு (General Studies) மற்றும் மனத்திறன் தேர்வு (Aptitude and Mental Ability Test ) ஆகியவை நடைபெற உள்ளன. நவம்பர் 9ஆம் தேதி இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.






எந்தெந்தப் பாடத்துக்கு எப்போது தேர்வுகள்?


இரண்டாம் தாளாக முதன்மை எழுத்துத் தேர்வு நவம்பர் 11ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தேர்வு நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், எந்த பாடத்துக்கு எந்த நாளில் தேர்வு என்ற விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. 





இந்த விவரங்கள் https://www.tnpsc.gov.in/Document/English/Addendum%2011A.pdf என்ற இணைப்பில் வழங்கப்பட்டு உள்ளன.