தொழிற்பயிற்சி நிலையங்களில் ITI சேர மாணவர்கள் விண்ணப்பிக்க இன்று (ஜூன் 7ஆம் தேதி) கடைசித் தேதி ஆகும். மாணவர்கள் http://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்‌நாட்டில்‌ உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்‌, அரசு உதவி பெறும்‌ தனியார்‌ தொழிற்பயிற்சி நிலையங்கள்‌, சுயநிதி தனியார்‌ தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ மாணவர்‌ சேர்க்கை ஆன்லைன்‌ கலந்தாய்வு மூலம்‌ மேற்கொள்ளப்பட உள்ளது. இதை அடுத்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.


விண்ணப்பதாரரின்‌ மதிப்பெண்களின்‌ அடிப்படையில்‌ தரவரிசைப்‌ பட்டியல்‌ வெளியிடப்பட்டு, அதற்கேற்ப ஒதுக்கப்பட்ட தேதிகளில்‌ அரசு விதிகளுக்குட்பட்டு ஆன்லைன்‌ கலந்தாய்வு வாயிலாக சேர்க்கை நடைபெறும்‌.


தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ பயிற்சி ஒவ்வொரு ஆண்டும்‌ ஆகஸ்ட் மாதம்‌ துவங்கும்‌. தொழிற்பயிற்சி நிலையங்களில் மத்திய அரசின் தேசிய தொழிற்பயிற்சிக் குழுமத்தின் அங்கீகாரத்தின் கீழ் பல்வேறு தொழிற்பிரிவுகளில் ஆறு மாதம், ஓராண்டு மற்றும் ஈராண்டு கால அளவுகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சியின் போது ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அகில இந்திய தொழிற் தேர்வு நடத்தப்பட்டு அனைத்து ஆண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு தேசிய தொழிற் சான்றிதழ் (NTC) வழங்கப்படும். 


கல்வித் தகுதி


தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்றுவிக்கப்படும் தொழிற்பிரிவுகளுக்கான கல்வித் தகுதியாக எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


என்னென்ன ஆவணங்கள் தேவை?


Name of the Candidate (விண்ணப்பதாரரின் பெயர்).
E-mail id (மின்னஞ்சல் முகவரி).
Mobile No. (அலைபேசி எண்).
சரியான, இந்த இணைய தளத்தில் வேறு எங்கும் பயன்படுத்தாத மின்னஞ்சல் முகவரி / அலைபேசி எண்ணாக இருத்தல் வேண்டும். மேலும் இதன் வாயிலாக சேர்க்கை தொடர்பான தகவல்கள் அனுப்பப்படும்.
Date of Birth (பிறந்த தேதி).
Community / Caste details. (வகுப்பு / சாதி விவரங்கள் (ST/SCA/SC/MBC/DNT/BCM/BC).
Aadhar No. (ஆதார் எண்.).
Priority Reservation (முன்னுரிமை இடஒதுக்கீடு).
a. Ex-servicemen / Ex-servicemen ward (முன்னாள் இராணுவத்தினர் / முன்னாள் இராணுவ வீரரின் மகன் / மகள்).
b. Differently abled Person (மாற்றுத்திறனாளிகள்) .
c. State level sports winner (மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் முதலிடம் பெற்றோர்).
d. Orphan / ஆதரவற்றோர்.



இணைய வழியாக ரூ.50 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். 


கீழ்க்காணும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் பொருட்டு scan செய்து JPEG வடிவில் வைத்துக்கொள்ளவும். file size (50 kb to 100 kb)
a. 8th / 10th Mark sheet (எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.
b. Transfer Certificate /மாற்றுச்சான்றிதழ்.
c. Community Certificate / சாதிச்சான்றிதழ்.
d. Priority Reservation Certificate / முன்னுரிமை இடஒதுக்கீட்டிற்கான ஆவணம்.
e. Migration certificate - for other state candidates, மற்ற மாநில விண்ணப்பதாரர்கள் இடப்பெயர்வு சான்றிதழ்


Passport size photo & signature ஆகிய ஆவணங்களை Scan செய்து JPG வடிவத்தில் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். 


மாணவர்கள் http://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.


விண்ணப்பிப்பது தொடர்பான விளக்கக் குறிப்பேட்டுக்கு https://skilltraining.tn.gov.in/DET/PDF-Files/lua24a1.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.


தொடர்பு எண்: 9499055612.