8 ஆம்‌ வகுப்பு  மற்றும் 10ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்‌ தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ ஐடிஐ பயிற்சியாளர்‌ சேர்க்கைக்கு இணையதளத்தில்‌ விண்ணப்பிக்கலாம்‌ என்று வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித் துறை அறிவித்துள்ளது. 


இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித் துறை ஆணையர்‌ கூறி உள்ளதாவது:


தமிழகத்தில்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித் துறையின்‌ கீழ்‌ 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ மற்றும்‌ 330 தனியார்‌ தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ இயங்கி வருகின்றன. இவற்றில்‌ தற்போது 2023- 2024ஆம்‌ கல்வியாண்டிற்கான பயிற்சியாளர்‌ சேர்க்கை பதிவு துவங்க உள்ளது.


தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ பயிற்சி பெற 8 ஆம்‌ வகுப்பு  மற்றும் 10ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌.


தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ 24.05.2023 முதல்‌ 07.06.2023 வரை பதிவு செய்து கொள்ளலாம்‌.


இணையதளத்தில்‌ பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள்‌, தமிழகம்‌ முழுவதும்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 147 உதவி மையங்கள்‌ மூலமாக சேர்க்கை பதிவை மேற்கொள்ளலாம்‌ என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இந்த மையங்களின்‌ பட்டியல்‌ www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது,


மேலும்‌, தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைகான விண்ணப்பித்தினை பூர்த்தி செய்வதில்‌ எதேனும்‌ ஐயம்‌ எற்படும்‌ நேர்வில்‌ கீழ்காணும்‌ மின்னஞ்சல்‌ முகவரியிலும்‌ அலைபேசி எண்ணிலும்‌ தொடர்பு கொள்ளலாம்‌.


மின்னஞ்சல்‌ முகவரி : onlineitiadmission@gmail.com
அலைபேசி எண்‌ மற்றும்‌ : 9499055612 


இவ்வாறு வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார். ‌ 


கூடுதல் விவரங்களுக்கு: https://nimiprojects.in/detonlineadmission2023/


மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க: https://nimiprojects.in/detonlineadmission2023/register.php என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்து காணலாம்.


ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்று அறிந்துகொள்ள: https://www.youtube.com/watch?v=-0oga-RkOwA என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 


தமிழ்நாடு முழுவதும் 9,14,320 மாணவ, மாணவிகள் எழுதிய 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 19ஆம் தேதி அன்று வெளியாகின. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார்.


முன்னதாக 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற்றன. தொடர்ந்து ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி மே 3 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. இதில் சுமார் 60 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். 


78 ஆயிரம் பேர் தோல்வி