IOCL Recruitment 2021 Job Vacancy: இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐ.ஓ.சி.எல்) தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத தொழிற்பழகுநர் பயிற்சிக்கான (அப்ரண்டிஸ்) ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Technician Apprentice (Mechanical/Electrical/Telecommunication & Instrumentation) ; Trade Apprentice (AssistantHuman Resource/ Accountant) ; Data Entry Operator (Fresher Apprentices/ Skill Certificate Holders) தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நபர்கள், அந்தந்த துறையின் கீழ் படித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு துறைக்கும் குறிப்பிட்டுள்ளபடி கல்வி மற்றும் தொழில்நுட்ப தகுதியின் அடிப்படையிலும், செப்டம்பர் 2019-இல் மாற்றி அமைக்கப்பட்ட விதிகளின் படியும் குறைந்த பட்ச உதவித் தொகை நிர்ணயிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
எழுத்துத் தேர்வின் மூலம் Technician Apprentice/ Trade Apprenticeக்குத் தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஒரு வருடம் தொழிற்பழகுநர் பயிற்சி வழங்கப்படும். வர்த்தக பயிற்சி மற்றும் தரவு நுழைவு ஆபரேட்டர் பிரிவில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 15 மாதகாலம் பயிற்சி அளிக்கப்படும்.
Technician Apprentice தொழில் பழகுநர் பயிற்சிக்கு, அந்தந்த துறைகளில் மூன்றாண்டு பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும். Trade Apprentice தொழில் பழகுநர் பயிற்சிக்கு, அந்தந்த துறைகளில் முழுநேர இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Data Entry Operator தொழில் பழகுநர் பயிற்சிக்கு குறைந்தபட்சம் 12ம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
மொத்த பணியிடங்கள்: 469
விண்ணப்பிக்கும் தேதி: இப்பணிக்கு 2021 அக்டோபர் 5ம் தேதி முதல் அக்டோபர் 25ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 01.10.2021 அன்றைய தேதியில், 18 வயது குறையாமலும், 24 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அரசு இடஒதுக்கீடு கொள்கைக்கு ஏற்ப, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கும் முறை: plapps.indianoil.in/ என்ற இணையதளம் மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில் தங்களது பயனாளர் கணக்கை தொடங்கி, அதன் பிறகு மின்னஞ்சலில் வரக்கூடிய தகவலின் அடிப்படையில், விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் பதிவு செய்யும் விவரங்களுக்கு ஆதாரமாக உரிய ஆவணங்களையும் தங்களது கணக்குகளில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்து வைத்த விண்ணப்பதாரர்கள், இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கும்போது ஏற்படும் நெரிசலில் சிக்காமல் விரைவாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், வாசிக்க:
SBI PO Recruitment 2021: எஸ்பிஐ வங்கியில் 2,056 வேலைகள் - உடனே விண்ணப்பிங்கள்..!