தமிழ்நாடு முழுவதும் தொழிற்கல்வி படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை சார்பில் உள்ளுறைப் பயிற்சி (Internship) வழங்கப்பட்டு வருகிறது. வெற்றிகரமாக உள்ளுறைப் பயிற்சியை முடிப்பவர்களுக்கு, சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. 


குறிப்பாக தொழிற்கல்வி மாணவர்களுக்கு, தொழில் கூடங்களில் பயிற்சி, வேளாண் பயிற்சி, விதைப் பண்ணையில் தொழில்நுட்பப் பயிற்சி உள்ளிட சிறப்பு உள்ளுறைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 


இந்தத் திட்டத்தில் மாநிலம் முழுவதும் மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆவது படிக்கும் 12,500 மாணவர்கள் பங்குபெற்றுள்ளனர். 470 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளுறைப் பயிற்சி பெறுகின்றனர். இவர்களுக்கு, 12 விதமான தொழிற்கல்வி பாடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 


Pragati scholarship: இலவசப் பெண் கல்வி..ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்- எப்படி? 



Internship for Students: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பயிற்சி; கல்வித்துறை அதிரடி..


இந்த மாணவர்களுக்கு வெவ்வேறு நிறுவனங்களில் 40 மணி நேர உள்ளுறைப் பயிற்சி வழங்கப்படுகிறது. வெற்றிகரமாக உள்ளுறைப் பயிற்சியை முடிப்பவர்களுக்கு, சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. 






வேளாண் துறையில் உள்ளுறைப் பயிற்சி


தொழிற்கல்வி படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. குறிப்பாக, பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் சுயமாகத் தொழில் தொடங்கும் வகையில், இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. 


வேளாண் துறையில் பயிற்சி பெறுவோருக்கு நாற்றங்கால் தயாரிப்பு, மண்புழு வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, பயிர் பாதுகாப்பு போன்றவை செயல் விளக்கத்தோடு கற்றுக் கொடுக்கப்படுகின்றன. 


 






பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ளுறைப் பயிற்சி முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


இதையும் வாசிக்கலாம்: Illam Thedi Kalvi: 'இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டங்களை முற்றிலும் கைவிடுக'- அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி வலியுறுத்தல் https://tamil.abplive.com/education/abolish-illam-thedi-kalvi-ennum-eluthum-schemes-aisec-to-tn-govt-88678/amp