அனைத்து அரசுப்பள்ளிகளிலும் இணைய சேவை கட்டாயம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளுக்கு இணைய சேவை வழங்குவது குறித்து பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு பள்ளிக் கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது.
தமிழ்நாடு முழுவதிலும் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் 22,831 தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 6587 நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 29,418 பள்ளிகளில் மொத்தம் 69,640 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையே அரசுப் பள்ளிகளில், கழிப்பறை, குடிநீர், வகுப்பறை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளில் குறைபாடு உள்ளதாக புகார் எழுப்பப்பட்டு வருகிறது.
அதேபோல பெரும்பாலான பள்ளிகளில் இணைய வசதியும் இல்லை. இந்த நிலையில், அனைத்து அரசுப்பள்ளிகளிலும் இணைய சேவை கட்டாயம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளுக்கு இணைய சேவை வழங்குவது குறித்து பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு பள்ளிக் கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து சமக்ர சிக்ஷா எனப்படும் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் இயக்குநர் ஆர்த்தி, பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.