இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (IGNOU) பல்வேறு துறை சார்ந்த படிப்புகளுக்கான டிசம்பர் 2021-க்கான பருவ இறுதித் தேர்வுகள் மார்ச் 4 முதல் தொடங்குகிறது. இத்தேர்வுகள் ஏப்ரல் 11, 2022 வரை நீடிக்கிரது என்று பல்கலைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  


மாணவர்கள் தங்கள் தேர்வு எழுதுவதற்கான அனுமதிச் சீட்டை (ஹால் டிக்கெட்)அதிகாரப்பூர்வ இணையதளமான http://ignou.ac.in./ மூலம் பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம்.


உலகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 800 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடத்தப்படும். 19 வெளிநாட்டு மையங்கள் மற்றும் சிறைக் கைதிகளுக்கான சிறைகளில் உள்ள 89 மையங்கள் உட்பட தேர்வு எழுதும் மையங்களை அமைத்துள்ளக்து.  தேர்வு எழுத விண்ணப்பித்த 6,76,790 தகுதியான மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளைப் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.


ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி:


இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்குச் செல்லவும்— ignou.ac.in


முகப்புப் பக்கத்தில் உள்ள ‘alerts’ பிரிவின் கீழ், ‘ஹால் டிக்கெட் டிசம்பர் 2021 இறுதித் தேர்வு என்றிருக்கும் லிங்கைக் கிளிக் செய்யவும்.


அடுத்து, அது புதிய வெப்பேஜ்ஜிற்கு அழைத்துச் செல்லும்.


'ஹால் டிக்கெட்டுக்கான லிங்க்' என்பதைக் கிளிக் செய்யவும்; மற்றொரு புதிய டேப் திறக்கும்.


உங்கள் பதிவு எண் மற்றும் படிப்பு குறித்த தகவலை பதிவு செய்து, ‘submit’. என்பதைக் கிளிக் செய்யவும்.


உங்கள் அட்மிட் கார்டு ஆவணம் திரையில் கிடைக்கும். அதை டவுன்லோடு செய்து செய்து கொள்ளுங்கள்.


 


தேர்வு நடக்கும் நாட்களில் மாணவர்கள் தங்களின் அனுமதி அட்டைகளை தேர்வு மையங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டியது அவசியமானது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். இருப்பினும், மாணவர்களிடம் ஹால் டிக்கெட்  இல்லாவிட்டாலும், தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், இந்த மையங்களுக்கான தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியலில் அவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும். இருப்பினும், மாணவர்கள் தேர்வின் போது பல்கலைக்கழகம்/அரசு வழங்கிய செல்லுபடியாகும் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும்.


இந்தத் தேர்வுகள் அரசு அறுவுறுத்தியுள்ள கொரோனா தொற்று பரவல் தடுப்பதற்கான கட்டுபாட்டு விதிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படும் என்றும் பல்கலைக்கழகம் உறுதியளித்துள்ளது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர



யூடியூபில் வீடியோக்களை காண