நாடு முழுவதும் உள்ள 8 ஐஐடி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 9000 வேலைகள் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் கிடைத்துள்ளது.


இதில் 160 பேருக்கு ஆண்டு வருமானம் ரூ.1 கோடி என்றளவில் மிகப்பெரிய நிறுவனங்களில் வேலையும் கிடைத்துள்ளது. ஐஐடி கல்வி நிறுவனங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் சிறப்பான வகையில் பணி ஆணைகள் அமைந்துள்ளன.


இது குறித்து ஐஐடி சென்னையின் பணிநியமனம், பயிற்சிகள் துறை ஆலோசகர் சி.எஸ்.சங்கர் ராம் கூறியதாவது: "இந்த ஆண்டு ஐஐடி சென்னையைச் சேர்ந்த 27 மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் மேல் ஊதியத்துடன் வேலை கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.1 கோடிக்கும் மேல் ஆண்டு வருமானத்தில் ஒரு மாணவர் கூட தேர்வாகவில்லை. ஆனால் இந்த ஆண்டு 27 பேருக்குக் கிடைத்துள்ளது. இதில் இந்திய, வெளிநாட்டு நிறுவனங்களும் அடங்கும். இவ்வாறு சங்கர் ராம் கூறியுள்ளார்.


சங்கர் ராம் ஐஐடியில் பேராசிரியாகவும் இருக்கிறார்.


ஐஐடி சென்னை மாணவர்களுக்கு மட்டும் 1327 பணி நியமனங்கள் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 1017 வேலைகள் மட்டுமே வேலை கிடைத்தன. இந்த ஆண்டில் இதுவரை வேலைக்காக விண்ணப்பித்த ஐஐடி சென்னை மாணவர்களில் 77% பேருக்கு வேலை கிடைத்துவிட்டது என்றும் சங்கர் ராம் தெரிவித்துள்ளார்.  


இந்தியாவில் காரக்பூர், மும்பை, சென்னை, கான்பூர், தில்லி, குவஹாத்தி, ரூர்க்கி, புவனேஸ்வர், காந்திநகர், ஐதராபாத், பாட்னா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் உள்ளன. இதுதவிர,  இந்திய அரசு மேலும் மூன்று இந்தூர், மண்டி, மற்றும் (பனாரசு இந்து பல்கலைக்கழகத்தை மாற்றி) வாரணாசி ஆகிய இடங்களில் ஐஐடி அமைத்துள்ளது.


இளநிலை படிப்பில் சேர்வதற்கு IIT-JEE தேர்வும் முதுநிலையில் சேர்வதற்கு Graduate Aptitude Test in Engineering (GATE)[For M.Tech]அல்லது Joint Management Entrance Test (JMET)[For Management Studies]அல்லது Joint Admission to M.Sc (JAM)[For M.Sc] அல்லது yJCommon Entrance Examination for Design (CEED) [For M.Des] தேர்வும் எழுத வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 8000 இளநிலை மாணவர்களும் 2000 முதுநிலை மாணவர்களும் சேர்க்கப்படுகிறார்கள். இளநிலை படிப்பதற்க்கு IIT-JEE தேர்வை ஆண்டுதோறும் ஏறத்தாள 300000 மாணவர்கள் எழுதுகிறார்கள்.


மிகுந்த போட்டிக்கு மத்தியில் ஐஐடியில் நுழைந்து படிக்கும் மாணவர்களுக்கு மிகப்பெரும் ஊதியங்களில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது


நன்றி : MoneyControl.