சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras), இளங்கலை பிரிவில் டேட்டா சயின்ஸ் படிப்பிற்கு தற்போது ப்ளஸ்1, ப்ளஸ்2 மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். இதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிபுரிபவர்கள், என அனைவரும் இந்த திட்டத்திற்கு பதிவு செய்யலாம். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஐஐடி மெட்ராஸின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, "IIT மெட்ராஸ் B.Sc இன் புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் திட்டத்தில், இப்போது +1 மற்றும் +2 வகுப்பு மாணவர்களும் படிக்கலாம். அனைவரும் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் நோக்கில், இந்த படிப்பில் சேர்வதற்கான எண்ணிக்கை வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை.
இளங்கலை புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் திட்டத்தில் சேர்வதற்கான தகுதிகள் என்ன?
ஜே.இ.இ. அட்வான்ஸ்டு 2021 க்கு தகுதியான அனைவரும் மே, 2022 இல் நேரடியாக இந்த திட்டத்தில் சேரலாம்.
மே 2022-க்குள் பதினொன்றாம் வகுப்பை முடிக்கும் மாணவர்கள் அல்லது தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படிப்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த படிப்பைப் பற்றி மேலும் தகவல்களை https://onlinedegree.iitm.ac.in/ என்ற இணையதளத்தில் பெறலாம்.
டேட்டா சயின்சில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தில் சேரலாம். தகுதியுள்ள மாணவர்களுக்கு இதற்காக உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. குடும்ப வருமானத்தின் அடிப்படையில் 75 சதவிகிதம் வரை கட்டணத் தள்ளுபடியையும், நிறுவத்தின் சி.எஸ்.ஆர். பங்குதாரர்கள் மூலம் கூடுதல் உதவுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.
இந்தப் படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நான்கு வார பயிற்சியை உள்ளடக்கியது. இதில் வீடியோ விரிவுரைகள், வாராந்திர பணிகள், கலந்துரையாடல் மன்றம் மற்றும் பேராசிரியர்கள் மற்றும் பாட பயிற்றுவிப்பாளர்களுடன் நேரடி தொடர்புகள் ஆகியவை அடங்கும். விண்ணப்பதாரர்கள் தகுதித் தேர்வை நேரில் எழுத வேண்டும், இது இந்த நான்கு வார உள்ளடக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது மற்றும் அவர்கள் குறைந்தபட்ச கட்-ஆஃப் பெற்றால், அவர்கள் இளங்கலை புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸின் அடிப்படைத் திட்டத்தில் சேரலாம்.
அனைத்து தேர்வுகளும் இந்தியா முழுவதும் 130-க்கும் மேற்பட்ட நகரங்களில் நியமிக்கப்பட்ட மையங்களில் நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் நேரில் கலந்து கொண்டு தேர்வு எழுத வேண்டும். இந்த திட்டத்தில், கற்பவரின் வசதியை மனதில் கொண்டு மிகவும் நெகிழ்வானதாக திட்டமிடப்பட்டிருக்கிறது. இதை எப்போது வேண்டுமானாலும் அணுகும் வகையில் இணையதளத்தில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர்வதற்கு பொது பிரிவினருக்கு ரூ.3000, தாழ்த்தப்பட்டவர்கள்/ பொதுப்பணித் துறை விண்ணப்பத்தாரர்களுக்கு ரூ.1500, தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ரூ.750 கட்டண தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்