சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணும், புழல் காவங்கரை பகுதியை சேர்ந்த சாம்சன் ராஜ் என்ற வாலிபரும் மாதவரத்தில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒன்றாக படித்தனர். அப்போது இளம்பெண்ணுக்கு 16 வயதே ஆகி இருந்தது. பள்ளி பருவத்தில் இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் , சாம்சன் ராஜ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த திருமணம் நடந்துள்ளது. இதன் பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு மாதவரத்தில் தான் படித்த பள்ளி அருகே வைத்து காதலியை சாம்சன் ராஜ் பார்த்துள்ளார். அப்போது அவரிடம் பேச்சு கொடுத்த சாம்சன் ராஜ், மாதவரம் பால் பண்ணை பகுதியில் ஆள் இல்லாத ஒரு வீட்டுக்கு இளம்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உல்லாசமாக இருந்துள்ளார்.

 

இந்த நேரத்தில் காதலியை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துள்ளார். இதன் பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு காதலியான இளம்பெண்ணுக்கும் திருமணமானது. திருமணத்துக்கு பிறகு காதலியை போனில் அழைத்து பேசிய சாம்சன் ராஜ்,  உனது ஆபாச படம் மற்றும் வீடியோ என்னிடம் உள்ளது. அதனை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த காதலி, சாம்சன் ராஜ் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தனது வீட்டில் வைத்தே மிரட்டி காதலியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதன் பின்னர் பலமுறை சாம்சன்ராஜ், போனில் தொடர்பு கொண்டு பேசி, தான் கூப்பிடும் போதெல்லாம் தனியாக வரவேண்டும் என்றும், அப்படி வரவில்லையென்றால் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். திருமணத்துக்கு பிறகும் காதலனின் தொல்லை எல்லை மீறி சென்றதால் மாதவரம் பால் பண்ணை போலீசில் இளம்பெண் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் சாம்சன் ராஜ் மீது போக்சோ உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சாம்சன்ராஜை கைது செய்தனர்.

 

 



 

சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு 

 



 

சென்னை எண்ணூர் துறைமுகத்திலிருந்து லாரியில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு , திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் சிவகுமார் வயது 38 என்பவர்  அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு குடோனை நோக்கி ஓட்டி சென்றார். செல்லும் வழியில் சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே லாரி சென்ற போது லாரியின் முன் பக்கம் இருந்து புகை வந்துள்ளது இதனை கண்ட லாரி ஓட்டுநர் உடனே கீழே இறங்கி பார்ப்பதற்குள் லாரி தீப்பிடித்து எரியத் துவங்கியது. இது குறித்து தகவலறிந்த மாதவரம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். கடந்த ஒரு மாதத்தில் ஒரு கார் ஒரு இரு சக்கர வாகனம் லாரி உட்பட மூன்று வாகனங்கள் மாதவரம் பகுதியில் தீப்பிடித்து எரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.