சிஏ ஜூன் மாத அமர்வுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகளை பட்டயக் கணக்காளர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் icaiexam.icai.org என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளை அறியலாம்.
இந்தியாவில் ஆடிட்டர் எனப்படும் பட்டய கணக்காளராக ஆசைப்படுவோர், ஐசிஏஐ எனப்படும் பட்டய கணக்காளர்கள் நிறுவனம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டியது கட்டாயம் ஆகும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மத்திய அரசு பட்டயக் கணக்காளருக்கான சான்றிதழை வழங்கும்.
இந்தத் தகுதித் தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. குறிப்பாக முதல்நிலைத் தேர்வு (Foundation Examination), இடைநிலைத் தேர்வு (Intermediate Examination), இறுதித் தேர்வு (Final Examination) என்ற வரிசையில் நடக்கும். பட்டப் படிப்பை முடித்தவர்கள், முதல்நிலைத் தேர்வை எழுதத் தேவையில்லை. இடைநிலை மற்றும் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது.
அதே நேரத்தில், ஒவ்வொரு பாடத்திலும் 40 சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஒட்டுமொத்தமாக 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றவர்கள், இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகளுக்குத் தகுதியானவர்கள் ஆவர்.
இந்த நிலையில், 2023-ம் ஆண்டு ஜூன் மாத அமர்வுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் மாதம் நடைபெற்றது. குறிப்பாக ஜூன் 24, 26, 28 மற்றும் 30ஆம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 290 தேர்வு மையங்களில் 4 தாள்களுக்குத் தேர்வு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?
* தேர்வர்கள் icaiexam.icai.org" target="_blank"> icaiexam.icai.org , icai.nic.in மற்றும் caresults.icai.org ஆகிய இணைய முகவரிகளை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
* குறிப்பாக மேலே குறிப்பிட்ட இணைய முகவரிக்குச் செல்லவும். அதில், வரிசை எண், பிறந்த தேதி, விண்ணப்ப எண் ஆகியவற்றைப் பதிவு செய்யவும். அல்லது https://icai.nic.in/caresult/foundation/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
* உங்களின் பக்கத்தில் தேர்வு முடிவுகள் தோன்றும்.
* அதை க்ளிக் செய்து, பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
மொபைல் மூலமாகவும் தேர்வு முடிவுகள்
தேர்வர்கள் மொபைல் எண் மூலமாகவும் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.குறிப்பாக 57575 என்ற எண்ணுக்கு CAFND XXXXXX (XXXXXX என்பது தேர்வரின் 6 இலக்க எண் - roll number ஆகும்.) என்று டைப் செய்து அனுப்பி, தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.
தேர்ச்சி எப்படி?
1,03,517 தேர்வர்கள் ஜூன் மாத அமர்வுக்கான முதல்நிலைத் தேர்வை எழுதிய நிலையில், வெறும் 25,860 தேர்வர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 24.98 சதவீதம் ஆகும். இதில் 47,944 மாணவிகள் தேர்வை எழுதி, 11,412 மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது 23.8 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைப் பொறுத்தவரை, 55,573 பேர் எழுதி, 14,448 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 25.99 சதவீதம் ஆகும்.
கூடுதல் விவரங்களுக்கு: icaiexam.icai.org