ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் சார்பில் வங்கிப் பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வின் பிரிலிம்ஸ் மதிப்பெண்கள் வெளியாகி உள்ளன.


தேர்வர்கள் https://ibpsonline.ibps.in/crpcl14jun24/scrdis1_oct24/login.php?appid=b4d5fc5ede335cc87684598eacd9c1a3 என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.


நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளில் உள்ள உதவி அலுவலர் காலி பணியிடங்களுக்கு வேலையில் சேர ஐபிபிஎஸ் தேர்வு நடத்தப்படுகிறது. பேங்க ஆஃப் பரோடா, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யு.சி.ஓ. வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா,பஞ்சாப் நேசனல் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, இந்தியன் வங்கி, பஞ்சாப் அன்ட் சிந்த் வங்கி ஆகிய வங்கிகளுக்கு இந்தத் தேர்வு மூலம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மொத்த பணியிடங்கள் 6,128 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆகஸ்ட்டில் முதல்நிலைத் தேர்வு


ஆகஸ்ட் 24, 25 மற்றும் 31 ஆகிய தேதிகளில் முதல்நிலைத் தேர்வு நடந்தது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் 1 அன்று வெளியாகின.


இந்த நிலையில் முதல்நிலைத் தேர்வுக்கான மதிப்பெண்கள் இன்று (அக்.4) வெளியாகி உள்ளன. இந்த மதிப்பெண் அட்டை அக்டோபர் 12 வரை ஐபிபிஎஸ் இணையதளத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதன்மைத் தேர்வு எப்போது?


முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு அக்.13 முதன்மைத் தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  


காண்பது எப்படி?


* தேர்வர்கள் https://ibpsonline.ibps.in/crpcl14jun24/scrdis1_oct24/login.php?appid=b4d5fc5ede335cc87684598eacd9c1a3 என்ற இணைப்பை க்ளிக் செய்து, மதிப்பெண்களை அறிந்துகொள்ளலாம்.


* அதில், பதிவு எண், கடவுச் சொல், கேப்ட்ச்சா ஆகியவற்றை உள்ளிட்டு, மதிப்பெண்ணைத் தெரிந்துகொள்ளலாம். 


* மதிப்பெண் அட்டையைத் தரவிறக்கம் செய்து, வருங்காலத் தேவைகளுக்காகப் பயன்படுத்தலாம். 


கூடுதல் தகவல்களுக்கு: https://ibps.in/