அரியலூரிலிருந்து சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு, நாகர்கோயில் அருகே உள்ள வள்ளியூருக்கு லாரி ஒன்று நேற்று இரவு புறப்பட்டுள்ளது. லாரி, மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே திருச்சி - மதுரை  தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்தது. இந்நிலையில், திருச்சி BHEL தொழிற்சாலையிலிருந்து தூத்துக்குடிக்கு காற்றாலை பொருட்கள் இறக்கிவிட்டு வந்துக்கொண்டிருந்த இரு லாரிகள் போட்டிப்போட்டுக் கொண்டு ஓட்டி சென்றபோது ஒன்றோடு ஒன்று உரசியது. இதனால் ஒரு லாரி மாற்று சாலைக்கு சென்று சிமெண்ட் ஏற்றி வந்த லாரியின் மீது மோதி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரு லாரிகளும் தீப்பற்றி மளமளவென எரிந்தது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற துவரங்குறிச்சி மற்றும் மணப்பாறை தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


 






 


இந்த விபத்தில் காற்றாலை லாரியில் வந்த ஓட்டுனர் மற்றும் கிளீனர் இருவரும் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர். நிகழ்விடத்துக்கு சென்ற டி.எஸ்.பி ராமநாதன் தலைமையிலான போலீஸார் கருகிய உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






மேலும் விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தினால் நள்ளிரவில் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரனையை மேற்கொண்டுள்ளனர். மேலும் லாரியில் தீயில் கருகி இறந்தவர்கள் லாரி ஓட்டுநர் உத்திரப்பிரதேசம் மாநிலம் டிகைடா பகுதியினை சேர்ந்த இந்திராமணிபால் என்பதும், கிளீனர் அதே மாநிலம் பிரதாப்கர் பகுதியினை சேர்ந்த பவன்பட்டேல் என்பதும் காவல்துறையின் முதல்கட்ட விசாரனையில் தகவல் தெரியவந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருவது வழக்கமாகியுள்ளது அதுவும் தற்போதைய காலகட்டத்தில் இது போன்ற விபத்துகள் நடப்பது அதிகமாகி கொண்டே வருகிறது எனவே இதனை தடுப்பதற்கான அனைத்து பணிகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் நெடுஞ்சாலை துறையில் என்னென்ன தேவைகள் உள்ளனவோ அதனை சரியாக பூர்த்தி செய்தால் மட்டுமே இது போன்ற விபத்துகளை தடுக்க முடியும் என்பது அப்பகுதி மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரு வேண்டுகோளாக உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண