12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 51 ஆயிரத்து 919 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. தோல்வி மற்றும் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்கள் ஆலோசனை பெறும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


பொதுத்தேர்வு முடிவுகள்:


12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடந்தது. சுமார் 7,80,550 பேர் தேர்வு எழுதினர். இதில் தனித்தேர்வர்கள் 8,190 பேரும் அடங்குவர். இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் 83 மையங்களில் நடைபெற்றது. 


இந்நிலையில், இன்று தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. முடிவில் 94.56% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளபடி, 51,919 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. அதில் 32,164 ஆண்களும் 19,755 பெண்களும் உள்ளனர். இந்நிலையில், தோல்வி மற்றும் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்கள் ஆலோசனை பெறும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  


சூழ்நிலை:


தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் சில மாணவர்கள் சில சூழ்நிலை காரணங்களால் மதிப்பெண்கள் குறைவாக எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். மேலும் சில மாணவர்கள் தேர்வில் தோல்வி அடையும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். மாணவர்கள் குறைவாக மதிப்பெண் எடுப்பதற்கும், தோல்வியடைந்ததற்கும் , அவர்களை சுற்றி இருக்கின்ற சூழல் மற்றும் குடும்ப சூழல் பெரும் முக்கிய காரணங்களாக இருந்திருக்கலாம்.


மேலும் சில மாணவர்கள் வேறு துறைகளில் நாட்டம் கொண்டு தேர்வில் கவனத்தை விட்டிருக்க கூடும். ஆகையால், தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்திருந்தாலோ, தோல்வி அடைந்திருந்தாலோ மிகவும் சோர்வடைய வேண்டாம்.




image credits: @pixabay


அடுத்து என்ன செய்ய வேண்டும்?


அடுத்த என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள். உங்களது ஆசிரியர்களை கலந்து யோசியுங்கள், அல்லது உங்களுக்கு நெருக்கமான படித்தவர்களிடம் கலந்தோசியுங்கள்.  தேர்ச்சி பெறாத தேர்வுக்கு, சில மாதங்களில் எப்படி தேர்ச்சி பெற்று, இந்த வருடமே எப்படி கல்லூரி சேர்வது என்பது குறித்து கேட்டறியுங்கள்.  உங்களது மனது மிகவும் சோர்வடைந்தாலோ, சோகமாக இருந்தாலோ, சுற்றி இருப்பவர்களோ உங்களை புரிந்து கொள்ளவில்லை என்றாலோ, உஙகளது மனதை புரிந்து கொள்ளும் வகையிலும் , உங்களுக்கு ஆறுதல் சொல்லும் வகையிலான எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  


ஆலோசனை பெறுங்கள்:


உங்களது சூழ்நிலையை பகிர்ந்து கொள்ளும் வகையிலும் ஆறுதல சொல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கு 104 எண்கிற எண்ணுக்கு அழையுங்கள் அல்லது 14416 என்ற எண்ணுக்கு அழையுங்கள்.   கடந்த 2023-23 ஆண்டு கல்வியாண்டி 46,932 நீட் தேர்வு மாணவர்கள் ஆலோசனை பெற்றுள்ளனர். சில மாணவர்களுக்கு பிரச்னை தீவிரமாக இருந்தால், மாவட்ட அளவில் தகவல் தெரிவிக்கப்பட்டு பிரச்னைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிக்கப்பட்டுள்ளது.


 


Also Read: Constitution of India: அரசியலமைப்பு சட்டம் குறித்து ஏன் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்?