ஜூலை 24-ம் தேதி நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதைத் தேர்வர்கள் எப்படி டவுன்லோடு செய்வது என்று பார்க்கலாம். 


கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகள் அடங்கிய தமிழ்நாடு அரசின் குரூப் 4 பணிகளில் மொத்தம் 7,382 காலி இடங்கள் உள்ளன. இதில் 81 இடங்கள் - விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 7,301 இடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படும். ஜூலை 24ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்தப் பதவிகளுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரை ஊதியம் அளிக்கப்படுகிறது.


குரூப் 4 தேர்வுக்கு இதுவரை இல்லாத வகையில் 21,85,328 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு முன்னதாக 2017-ம் ஆண்டில் 20.76 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த முறை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 21.5 லட்சத்தைக் கடந்துள்ளது. இதில், பெண்களே அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்துள்ளனர்.


தேர்வு முறை எப்படி?


மொத்தம் 200 கேள்விகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. முதல் 100 கேள்விகள் தமிழ் சார்ந்து கொள்குறி வகையில் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் இருந்து 75 கேள்விகளும் கணக்கு மற்றும் நுண்ணறிவு பகுதியில் இருந்து 25 கேள்விகளும் கேட்கப்படும். மொத்தம் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும்.


முதல் பகுதியில் 150 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் பெற்றவர்களின் தேர்வுத்தாள் மட்டுமே திருத்தப்படும். மொத்தம் 90 மதிப்பெண்களைக் குறைந்தபட்சமாகத் தேர்வர்கள் பெற வேண்டும். அவர்களின் பெயர்கள் மட்டுமே தரவரிசைப் பட்டியலில் இடம்பெறும்.  


இந்த நிலையில், குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதைத் தேர்வர்கள் எப்படி டவுன்லோடு செய்வது என்று பார்க்கலாம். 




* தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதள பக்கத்துக்குச் செல்ல வேண்டும். 


* ஏற்கெனவே பதிவு செய்தோர் என்ற தெரிவை க்ளிக் செய்ய வேண்டும். 


* தேர்வர்களின் விவரங்களைப் பூர்த்தி செய்து, ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம். 


இதையும் வாசிக்கலாம்: கல்லூரிகளில்‌ 1060 விரிவுரையாளர்‌ காலிப் பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு 


*


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண