நடிகர் சாரா அலி கான், தான் வாழ்க்கையில் தான் 'படிப்படியாக முன்னேறி’ வருவதையும் மற்றும் 'தன்னை தானே இதன்வழியாக ஆச்சரியப்படுத்துக் கொள்கிறேன்' என்றும் அண்மையில் பேசியுள்ளார். அண்மையில் அளித்த நேர்காணல் ஒன்றில்,


 
‘நான் கோவிலுக்கும் செல்வேன். அதே நேரம் பிகினி அணிவதும் எனக்குக் பிடிக்கும். அந்த இரண்டு நபருமே நான் தான்’ என்று கூறியுள்ளார்.  படப்பிடிப்பு சமயத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாகத் தனது அம்மா நடிகர் அம்ரிதா சிங்கை விலகி இருக்க நேர்ந்ததாகக் கூறும் அவர். அப்படி விலகி வாழ்வதை தான் வெறுப்பதாகக் கூறியுள்ளார். அவர் தான் தனது கோடை விடுமுறையை பெற்றோருடன் கழித்தது பற்றியும் தனது அந்தப் பேட்டியில் பகிர்ந்துகொண்டார். கோடை விடுமுறை காலத்தில் தனது பெற்றோருடன் பிராட்வே ஷோக்களை கண்டுகளித்ததையும் அவர் கூறினார்.






தந்தை சய்ஃபும் தானும் புத்தகங்கள் பற்றி விவாதம் செய்வதைப் பற்றிப் பேசிய சாரா அப்பா தனக்கு லியோ டால்ஸ்டாயின் அன்னா கரேனினாவை படிக்கத் தனக்கு பரிந்துரை செய்ததையும் பின்னர் தான் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது ஹோமரின் தி ஒடிஸி முதல் டான்டேஸின் இன்ஃபெர்னோ வரை நிறைய கிளாசிக் இலக்கியங்கள் படித்ததைப் பகிர்ந்துகொண்டார். அந்த புத்தகங்களைப் பற்றி தனது தந்தை சய்ஃபிடம் சொன்னபோது, அவர் ஆர்வமாகி அவற்றைப் படிக்கத் தொடங்கினார் என்பதையும் சாரா கூறினார்.






சாரா இறுதியாக நடிகர் தனுஷ் அக்‌ஷய் குமாருடன் அத்ரங்கி ரே படத்தில் இணைந்து நடித்திருந்தார்.