நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக ரயில்வே, வங்கி மற்றும் எஸ்எஸ்சி ஆகிய மத்திய அரசுத் தேர்வுகளை வெல்வதற்கான சிறப்பு பயிற்சி தமிழக அரசால் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 100 நாள் ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் 25.05.2023 முதல் தொடங்கப்பட உள்ளன.
'நான் முதல்வன்' திட்டமானது தமிழக முதல்வரின் தொலைநோக்குத் திட்டமாகும். அதன்கீழ், நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவானது மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையங்களால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் வெற்றிபெற, பயிற்சி மற்றும் பிற தேவையான உதவிகளை வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்துவதற்காகத் தொடங்கப்பட்டது.
"ரயில்வே, வங்கி, எஸ்எஸ்சி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு" என்பது தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவால் வடிவமைக்கப்பட்ட பயிற்சித் திட்டமாகும்.
இந்தப் பயிற்சித் திட்டத்தின் மூலம் தகுதியுடைய தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இலவச வகுப்புகள், தேர்வுகள், பாடப்புத்தகங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
இப்பயிற்சி திட்டத்தின் மூலம் மத்திய அரசின் வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைப் பயிற்றுவிப்பதற்காக நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவு தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 150 விண்ணப்பதாரர்களை ஏற்கின்றது . 150-க்கும் மேல் விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில், 10- ம் வகுப்பு , 12 ம் வகுப்பு, இளநிலை பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் கல்விக்கான இட ஒதுக்கட்டுக் கொள்கையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் .
குறிப்பு : தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. தகுதி:
குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது எல்லை:
குறைந்தபட்சம் - 21
அதிகபட்சம் - 35
2. விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
https: //candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX
முக்கிய நாட்கள்
2. ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 11.05.2023
3. விண்ணப்பத்தை சமர்ப்பிபபதற்கான கடைசி தேதி: 20.05.2023
4. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பட்டியல் வெளியீடு: 23.05.2023
5. பயிற்சி வகுப்பின் தொடக்க தேதி: 25.05.2023
பாடத்திட்டம் மற்றும் பயிற்சி மைய விவரங்கள் பயிற்சிக் காலம்
1. பயிற்சி வகுப்புகள் 25.05.2023 அன்று முதல் தொடங்க உள்ளன.
2. இந்த முழுநேர பயிற்சியானது மொத்தம் 100 நாட்களுக்கு நடைபெறும்.
வகுப்புகள்:
1. முழு நேர வகுப்புகள் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடத்தப்படும். (திங்கள் - வெள்ளி)
2. ஒவ்வொரு நாளும் மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழிகாட்டுதல் வகுப்புகள் நடத்தப்படும். (திங்கள் - வெள்ளி)
3. வகுப்புகள் மற்றும் வழிகாட்டல் திட்டத்தில் கலந்துகொள்வது கட்டாயமாகும்.
தேர்வுகள்:
1. பிற்பகல் அமர்வில் பயிற்சித் தேர்வுகள் தினசரி அடிப்படையில் நடத்தப்படும்.
2. வாராந்திர தேர்வுகள் சனிக்கிழமைகளில் நடத்தப்படும்.
பாடப்புத்தகங்கள் :
பதிவு செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் மற்றும் பாடத்திட்டம் தொடர்பான அனைத்துத் தலைப்புகளுக்கான கையேடுகளும் வழங்கப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வகுப்பறை இருக்கும் இடம், இறுகித் தேர்வுப் பட்டியலுடன், அதாவது 23.05.2023 அன்று அறிவிக்கப்படும்.
கூடுதல் தகவல்களுக்கு: 8056258702 / 7845786117 / 7845766103
https: //www.naanmudhalvan.tn.gov.in/servicedesk/users/index.php
கூடுதல் விவரங்களுக்கு: https://naanmudhalvan.tn.gov.in/pdfs/Notification.pdf