கேள்விகளை நீங்களே தயாரித்து  அதற்கான விடையினை எழுதுங்கள் என கோவா ஐஐடி பேராசிரியர்கள் உத்தரவிட்டதால் மாணவர்கள் செய்வது அறியாமல் திகைத்தனர்.

Continues below advertisement



மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்வது தேர்வுகள் மூலம் தான். பள்ளி மற்றும் கல்லூரிகளில் வழக்கமாக தேர்வு என்றால் மாணவர்கள் அதன் பாடத்திட்டத்தினை மட்டும் படித்துவிட்டு ஆசிரியர்கள் தரும் கேள்வித்தாள்களுக்காக காத்திருப்பார்கள். இந்த நடைமுறை தான் காலம் காலமாக கல்வித்துறையில் இருந்து வருகிறது. ஆனால் கொரோனா பெருந்தொற்று மக்களை ஆட்டி படைத்து வரும் நிலையில், மாணவர்களால் பள்ளிகளுக்கு கூட செல்ல முடியாத நிலைதான் ஏற்பட்டுள்ளது. வகுப்புகள் மற்றும் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெற்று வருகிறது. இதோடு மட்டுமின்றி முன்பெல்லாம் தேர்வு என்றாலே புத்தகங்களை தேர்வறைக்கு வெளியில் விட்டு வாருங்கள், மொபைல் போன்ற எதனையும் உபயோகிக்க கூடாது என்பார்கள்.  ஆனால் கொரோனா அத்தனை செயல்முறைகளிலும் மாற்றி விட்டது என்றே கூறலாம்.



ஆம் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகளுக்கு மாணவர்கள் ஆன்லைனில் விடைகளை தேடி எழுதவும், புத்தகங்களை திறந்து வைத்து எழுதவும் அனுமதிக்கப்பட்ட சூழல்தான் உள்ளது. இதற்கு எல்லாம் முற்றிலும் மாறுபட்டு மாணவர்களே ஷாக் ஆகும் அளவிற்கு வினாத்தாள் தயாரிக்க சொல்லி இருக்கிறார்கள் கோவா ஐஐடி உயர்கல்வி கூட பேராசிரியர்கள். 


எப்படி தெரியுமா? ANALOG CIRCUITS என்ற பாடத்திற்கான இறுதி செமஸ்டர் தேர்விற்கு உயர்கல்வி பேராசிரியர்கள் ஒரு வினாத்தாளை அனுப்பியுள்ளனர். அதில் இதுவரை கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களை கொண்டு (study meterials)  மாணவர்கள் நீங்களே கேள்விகளை  70 மதிப்பெண்களுக்கு தயாரிக்குமாறு கூறியுள்ளனர். மேலும் நீங்கள் தயாரித்த கேள்விகளுக்கு பின்னர் 2 மணி நேரத்தில் அதற்கான பதிலை எழுதுங்கள் என சொல்லியுள்ளனர். இதோடு மட்டுமின்றி உங்களது நண்பர்களுடன் செமஸ்டருக்கான கேள்விகள் தயாரிப்பது குறித்து கலந்தாலோசிக்க கூடாது எனவும், ஒரு வேளை ஒரே மாதிரியான கேள்விகள் இருந்தால் மதிப்பெண்கள் குறைக்கப்படும் என கோவா ஐஐடி பேராசிரியர்கள் எச்சரித்துள்ளனர். இந்த முறை மாணவர்களுக்கு ஷாக் அளிக்கும் விஷயமாக இருந்தாலும், அவர்களின் கல்வி அறிவினை வளர்க்கும் விதமாக அமைந்துள்ளது என சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



டிவிட்டர் பயனாளர் ஒருவர், ஐ.ஐ.டி கோவா மாணவர்களை மதிப்பீடு செய்வதற்கான இந்த தனித்துவமான வழியை பேராசிரியர் கண்டுபிடித்துள்ளதாக பாராட்டியுள்ளார். மேலும் கல்வியை அனுபவித்து பயில வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை எடுத்துள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர்.



இதோடு திறந்த புத்தக கேள்விகளைத் (open book questions) தயாரிக்க கேட்டால், அது திறனை சிறப்பாக சோதிக்க உதவுகிறது" என்று மற்றொரு பயனர் ட்வீட் செய்துள்ளார்.