GATE 2023 Result : பொறியியல் படிப்புக்கான கேட் (GATE) நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது. 


கேட் (GATE) நுழைவுத் தேர்வு


மத்திய அரசு சார்பில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) என்னும் உயர் கல்வி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி. உள்ளிட்ட மத்திய அரசின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க முடியும்.  


ஆண்டுதோறும் நடைபெறும் கேட் தேர்வை ஐ.ஐ.டி. நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஐ.ஐ.எஸ்.சி. எனப்படும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமோ நடத்துகின்றன. இந்த ஆண்டு கேட் தேர்வை ஐ.ஐ.டி. கான்பூர் நடத்துகிறது.


ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி மாதத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெறும். அந்த வகையில் 2023-24ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் தேர்வு, 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 4, 5, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பிப்ரவரி 21ஆம் தேதி தற்காலிக விடைகுறிப்புகள் வெளியிடப்பட்டது.  


மொத்தம் 100 மதிப்பெண்களைக் கொண்ட இத்தேர்வு சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 27 பாடப் பிரிவுகளில் நடத்தப்பட்டு வந்தது. மொத்தம் 29 பாடப்பிரிவுகளில் கேட் தேர்வு நடைபெற்றது. 


முடிவுகள் வெளியீடு


இந்நிலையில் இன்று கேட் (Gate) நுழைவு தேர்வுக்கான முடிவை ஐஐடி கான்பூர் வெளியிட்டது. https://gate.iitk.ac.in/ என்ற இணையத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • தேர்வெழுதிய மாணவர்கள் GATE அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று பார்க்க வேண்டும். https://gate.iitk.ac.in/ என்ற இணையத்தை கிளிக் செய்ய வேண்டும்.

  • முகப்பு பக்கத்தில் login என்ற option-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

  • பின்னர், அதில் கேட்டுள்ளதை பூர்த்தி செய்ய வேண்டும்.

  • அதன்பின்பு, GATE தேர்வுக்கான முடிவுகள் தோன்றும். அதனை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


கேட் (Gate) நுழைவு தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், மதிப்பெண் அட்டைகள் வரும் 21ஆம் தேதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் படிக்க


12th ECONOMICS Question Bank: பிளஸ் 2 பொருளியல் பாடத்தில் சூப்பர் மதிப்பெண்கள் பெறலாம்- மாதிரி வினாத்தாள் இதோ!