2023ஆம் ஆண்டுக்கான பொறியியல் கேட் தேர்வுகள் எப்போது என்று முழு அட்டவணையை ஐஐடி கான்பூர் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) என்னும் உயர் கல்வி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க முடியும்.
ஆண்டுதோறும் நடைபெறும் கேட் தேர்வை ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஐஐஎஸ்சி எனப்படும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமோ நடத்துகின்றன. இந்த ஆண்டு கேட் தேர்வை ஐஐடி கான்பூர் நடத்துகிறது.
ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி மாதத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெறும். அந்த வகையில் 2023-24ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் தேர்வு, 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 4, 5, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேதிகளில் என்னென்ன தாள்கள் நடைபெற உள்ளன என்ற அட்டவணை வெளியாகி உள்ளது.
ஜனவரி 3ஆம் தேதி முதல் ஹால் டிக்கெட்
கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாள் ஆக இருந்தது. எனினும் விண்ணப்பிப்பதற்கான தேதி அக்டோபர் 4 வரை நீட்டிக்கப்பட்டது. ஜனவரி 3ஆம் தேதி முதல் தேர்வர்கள் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மார்ச் 16ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
இரண்டு ஷிஃப்டுகளாக கேட் தேர்வு நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையிலும் மதியம் 2.30 மணி முதல் 5.30 வரையிலும் நடைபெறுகிறது. குறிப்பாக 100 மதிப்பெண்களுக்கு 29 தாள்களுக்கு நடைபெற உள்ளது.
தேர்வு அட்டவணை
பிப்ரவரி 4ஆம் தேதி சிஎஸ் (CS), ஏஆர் (AR), எம்இ (ME) தாள்களுடன் தொடங்கும் கேட் தேர்வு, பிப்ரவரி 12ஆம் தேதி சிஇ1, எஸ்டி, சிஇ1 மற்றும் எம்என் தாள்களுடன் முடிவடைகிறது.
பிப்ரவரி 4ஆம் தேதி- சிஎஸ் (9.30 மணி முதல் 12.30 மணி வரை), ஏஆர், எம்இ ( மதியம் 2.30 மணி முதல் 5.30 வரை)
பிப்ரவரி 5ஆம் தேதி- EE, ES, XH (9.30 மணி முதல் 12.30 மணி வரை), BM, CY, EC ( மதியம் 2.30 மணி முதல் 5.30 வரை)
பிப்ரவரி 11ஆம் தேதி- GG, IN, MA, PE, XE, XL (9.30 மணி முதல் 12.30 மணி வரை), AE, AG, BT, CH, EY, GE, MT, NM, PH, PI, TF (மதியம் 2.30 மணி முதல் 5.30 வரை)
பிப்ரவரி 12ஆம் தேதி- CE1, ST (9.30 மணி முதல் 12.30 மணி வரை), CE2, MN (மதியம் 2.30 மணி முதல் 5.30 வரை)
கூடுதல் விவரங்களுக்கு