அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் செந்திலை வைத்து அமுதாவை துரத்த நடக்கும் சதி நடக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெற்றுள்ளது. 


விறுவிறுப்பாக செல்லும் சீரியல் 


தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர்.


தன் அம்மாவின் கனவுக்காக வாத்தியார் வேலை செய்வதாக சொல்லி பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் பியூனாக இருக்கும் செந்திலை வாத்தியார் என நினைத்து காதல் கொள்கிறார் அமுதா. அந்தக்காதல் திருமணம் வரை சென்ற நிலையில், செந்திலை பற்றிய உண்மை தெரிய வருகிறது. இதன் பிறகு இந்த சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பது விறுவிறுப்பாக செல்வதால், ரசிகர்களின் ஃபேவரைட் சீரியலாக அமுதாவும் அன்னலட்சுமியும் உள்ளது.  






மன்னிப்பு கேட்க தயாரான அமுதா


முன்னதாக அமுதாவை அவமானப்படுத்தும் நோக்கில்  வீட்டை விட்டு வெளியேறும் பரமு, சின்னா, வடிவேலு அவர் தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுகிறார்கள். இதனை அன்னலட்சுமி ஏற்றுக் கொள்ளவே மறுக்க, இந்த குடும்பத்தை பிரிச்சிட்டேன்னு ஊர் சொல்வாங்க. அதனால நான் மன்னிப்பு கேட்கிறேன் என முடிவெடுக்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கும் என்பதை காணலாம்.  


செந்தில் சின்னாவின் அம்மாவை அழைத்து வரும் நிலையில் அவர்  சின்னாவையும் பரமுவையும் அடிக்கிறார். அமுதா உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணுமா? ஒழுங்கா ரெண்டு பேரும் அவ கூட இருந்து வேலையை பாருங்க, இனிமே ஏதாவது பண்ணுனீங்கனு நான் கேள்விப்பட்டேன், உங்க ரெண்டு பேரையும் நானே கொன்னுருவேன் என மிரட்டுகிறார்.


இதனை சற்றும் எதிர்பாராத பரமுவும் சின்னாவும் அங்கிருந்து வீட்டிற்கு செல்லலாம் என முடிவெடுக்கும் நிலையில் செந்தில் சின்னா அம்மாவிடம் கண்கலங்கி நன்றி சொல்கிறான்.நம்ம 2 பேர் வீட்டிலும் இருக்கும் எதற்கும் உதவாமல் இருக்கும் ரெண்டு பேரும் சேர்ந்து ஆட்டம் போட்டு இருக்காங்க. இவங்க ரெண்டு பேராலும் உனக்கு இப்படி ஒரு காரியத்தை பண்ணக் கூடாது. நீ உன் பொண்டாட்டி கௌரத்துக்காக சொல்லும் போது நான் பண்ணாம இருப்பனா? ...அவளை என்னைக்கு விட்டு கொடுக்காத...அவதான் உன் குடும்பத்தை காப்பாத்த வந்த சாமி என சின்னா அம்மா கூறுகிறார். 


இதனையடுத்து செந்தில் சொல்லிக் கொண்டிருப்பதை கேட்ட அமுதா, எனக்காக நீங்க ஒண்ணும் பண்ண வேண்டாம் என சொல்கிறார்.  நான் உனக்காக எதுவும் பண்ணலை. ஆனா உனக்கு அவமானம் வரும் போது அதை நான் சும்மா விட மாட்டேன். என் குடும்பத்துக்காக உன் குடும்பத்தை விட்டுட்டு வந்த , அப்படிப்பட்ட உனக்கு அவமானம் ஏற்படாம பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு என சொல்கிறார் செந்தில்.


மேலும் பரமு, சின்னா, வடிவேலு மூன்று பேரும் தனியே பேசிக் கொண்டிருக்க அமுதாவை எதிர்த்து ப்ளான் இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது.. நாம போடுற பிளான்ல செந்திலே அமுதாவை அடிச்சி துரத்துற மாதிரி பண்ணனும் என சொல்லும் காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.