அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி எப்போது வழங்கப்படும் என்று  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார். 


திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு செய்யப்பட்டதை அடுத்து, பள்ளிக் கல்வித்துறை மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை சார்ந்து 5 முக்கியத் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார். அதன்படி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுவது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. 


இதற்கிடையே இணையவழி சேவைகள் தொடக்கம், கல்வியாண்டு நாட்காட்டி மற்றும் ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட நாட்காட்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு, நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார். 


இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறும்போது, ''21 மாநகராட்சிகளில் 25 இடங்களில் காலைச் சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எப்படிப் பணியாற்றுகிறார்கள் என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


மிகப்பெரிய திட்டம் இது. இதனால், ஜூன் 13-ம் தேதி காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமலுக்கு வர முடியாது. அதற்குப் பிறகு, முழுவீச்சில் காலை உணவு வழங்கப்படும். சிற்றுண்டி வழங்கப்படும் நேரத்தில் மாற்றம் இருக்காது. காலை 8.30 மணிக்கு உணவு வழங்கப்படும். 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கப்படும். 


மாநில கல்விக் கொள்கை


மாநில கல்விக் கொள்கை குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும். எப்போது என்று முதலமைச்சரிடம் பேசி முடிவு செய்யப்படும்'' என்று அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். 




பொதுத் தேர்வு தேதி


பொதுத் தேர்வுகள் குறித்துப் பேசியவர், ’’மார்ச் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளது. அதேபோல மார்ச் 14ஆம் தேதி 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஆரம்பிக்கின்றன. அதேபோல ஏப்ரல் 3ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன.


கொரோனா கால அட்டவணையைப் போல அல்லாமல், வழக்கமான கல்வி ஆண்டாக இந்த ஆண்டு செயல்படும். 210 வேலை நாட்களுடன் பள்ளிகள் செயல்பட உள்ளன. காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும். 


பள்ளிகள் திறப்பு


1-10 வகுப்புகளுக்கு ஜூன் 13ஆம் தேதியும், பதினொன்றாம் வகுப்பிற்கு ஜூன் 27ஆம் தேதியும், பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும்’’ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் வாசிக்கலாம்: Saturday Leave: இனி லீவுதான்! எல்லா சனிக்கிழமைகளிலும் பள்ளிக்கு விடுமுறை- அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண