CBSE Exam: நடப்பு கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய நடைமுறை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

சிபிஎஸ்இ பள்ளிகளில் ”FAIL” நடைமுறை

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சிபிஎஸ்இ பள்ளிகளில், இனி 3, 5, 8ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் 'ஃபெயில்' என்ற நடைமுறை அமலுக்கு வீந்தது. இதற்காக தங்களின் குழந்தைகள் குறைவான மதிப்பெண்கள் எடுத்தால் ஃபெயில் ஆக்க சம்மதிப்பதாக பெற்றோர்களிடம் பள்ளிகள் ஒப்புதல் கடிதம் பெறத்தொடங்கியுள்ளன. அதேநேரம், ஏப்ரல் மாதம் முடிவதற்கு முன்பே 9ம் வகுப்பு வரை விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, பழைய விதிமுறைப்படி மாணவர்கள் அடுத்த வகுப்புக்குச் சென்று விட்டதால். புதிய நடைமுறையானது அடுத்த ஆண்டில் இருந்துதான் முழுமையாக நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 30 சதவிகிதத்திற்கும் குறைவான மதிப்பெண்கள் எடுத்தால், சிபிஎஸ்இ தேர்வுகளில் தோல்வி  என அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

புதிய தேசிய கல்விக்கொள்கை:

8ம் வகுப்பு வரையில் கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறை மாற்றப்பட்டு, தேசிய கல்விக் கொள்கையின்படி விதிகள் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி, இனி குறைந்தட்ச தேர்சிக்காக நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்கள் எடுக்காத மாணவர்கள் 3. 5 மற்றும் 8ம் வகுப்புகளில் ஃபெயில் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகம்  2024ல் பழையை கட்டாய கல்வி சட்டத்தின், 16 மற்றும் 38 விதிகளிலிருந்த கட்டாய தேர்ச்சியை திருத்தியது குறிப்பிடத்தக்கது. இதன்படி, ஆண்டு இறுதி தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள், அடுத்த 2 மாதங்களில் மீண்டும் இறுதி தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள்.  ஒருவேளை மாணவர்கள் அதிலும் தோல்வியுற்றால், அவர்கள் மீண்டும் அதே வகுப்பை படிக்க வேண்டி இருக்கும். மத்திய அரசின் கீழ் இயங்கும் கேதிரியா வித்யாலாயா, நவோத்யா வித்யாலயாஸ் மற்றும் சைனிக் பள்ளிகளில் இந்த விதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநில அரசு பள்ளிகளில் இதனை செயல்படுத்துவது, மாநில அரசுகளின் விருப்பம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement