Marriage Dispute UP: உடலுறவு விவகாரத்தில் குறைபாடு இருப்பதாலேயே எனது கணவனை விட்டு விலகியதாக மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.
கொழுந்தனுடன் ஓடிப்போன பெண்:
உத்தரபிரதேச மாநிலத்தில் அவ்வப்போது நிகழும் வித்தியாசமான சம்பங்களில் மேலும் ஒன்று இணைந்துள்ளது. அதன்படி, மீரட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தாடியை எடுக்க மறுத்ததால், எனது மனைவி என்னுடைய தம்பியுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டதாகவும், இனி மீதமுள்ள காலத்தை அவருடன் கழிக்கவே அவள் விரும்புவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். அதேநேரம், எனது கணவன் பொய் சொல்வதாகவும், அவருக்கு உடலுறவு விவகாரத்தில் பிரச்னை இருப்பதாகவும் குற்றம்சாட்டி பரபரப்பை கிளப்பியுள்ளனர்.
திருமண புகைப்பட்ம:
கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக முகமத்து சாகிர் என்பவர் அர்ஷி எனும் பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தில் சாகிர் புதிய வெள்ளை குர்தா மற்றும் பைஜாமா அணிந்திருந்தார், அர்ஷி தங்க நகைகளுடன் கூடிய பச்சை நிற ஆடையை அணிந்திருந்தார். சாகிர் தனது பளபளப்பான கருப்பு தாடியையும் சிறப்பு நாளுக்காக அழகுபடுத்தியுள்ளார். ஆனால் இந்த தாடிதான் அவரது தோல்வியுற்ற திருமணத்திற்கு காரணமாக இருக்கும் என்று அவருக்குத் தெரியாது போல என குறிப்பிட்டு அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
வெடித்த பிரச்னை:
சம்பவம் தொடர்பாக சாகிர் கூறுகையில், “திருமணமான சில நாட்களிலேயே தாடியை எடுக்குமாறும் தனது கணவரிடம் அர்ஷி வலியுறுத்த தொடங்கியுள்ளார். ஆனால், அது தனக்கு மிகவும் பிடித்தமானது என குறிப்பிட்டு சாகிர் தாடியை வழித்து எடுக்க மறுத்துள்ளார். இந்த ஒரு சிறிய மாற்று கருத்து தான் நாளடைவில் பெரும் வாக்குவாதமாகவும், இருவருக்கும் இடையேயான சண்டையாகவும் வெடித்துள்ளது. இதனிடையே, தனது கொழுந்தன் சபீர் மீது அர்ஷிக்கு காதல் ஏற்பட்டது. அவர் தன்னை போல தாடி வைத்திருக்காமல் முழுவதுமாக வழித்து எடுத்து இருந்தார். இருவருக்கும் இடையே நெருக்கம் வளர்ந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அவர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடிவிட்டனர்” என குறிப்பிட்டுள்ளார்.
கணவனை கொல்ல முயற்சி?
மனைவி திரும்பி வந்துவிடுவாள் என நம்பி இரண்டு மாதங்களாக காத்திருந்து அண்மையில் சாகிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ”எனது மனைவிக்கும், சகோதரனுக்கும் இடையேயான காதல் உரையாடல்கள் என்னிடம் உள்ளன. அதில் அவள் உணவில் விஷம் கலந்தோ அல்லது கூலிப்படையை ஏவியோ என்னை கொன்றுவிட்டு, எனது தம்பியை திருமணம் செய்ய திட்டமிட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன” என குற்றம்சாடிட்யுள்ளார்.
”அந்த விஷயத்துல வீக்”
இந்நிலையில் தான், அர்ஷி தனது காதலனுடன் பெற்றோர் வீட்டிற்கு வந்தாள். அப்போது சாகிர் உடன் வாழ தனக்கு விருப்பமில்லை என்றும், சபீரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தனது பெற்றோரிடம் தெரிவித்து இருக்கிறாள். மேலும், கணவன் உடனான பிரச்னைக்கு தாடி காரணமில்லை என்றும், பாலியல் ரீதியாக அவர் உடல் தகுதியற்றவர் என்றும் அர்ஷி குற்றம்சாட்டியுள்ளார். இதன் காரணமாக, தனது மனைவியை விவாகரத்து செய்வதாக போலீசார் முன்னிலையிலேயே சாகிர் தெரிவித்துள்ளார்.
எனில், ”தனது பெற்றோரிடம் இருந்து வரதட்சணையாக வாங்கிய 5 லட்சத்தை திருப்பிக் கொடுங்கள். அதில் பாதி பணத்தையாவது திருப்பிக் கொடுங்கள். இல்லையென்றால் எனக்கு விவாகரத்தை ஏற்கமாட்டேன். நான் என் கொழுந்தனுடன் வாழ விரும்புகிறேன்” என அர்ஷி பேசியுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.