பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான முன்பதிவுக்கு ஜூன் 20 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 51 இலவச மையங்கள் இருந்த நிலையில், தற்போது 110 இலவச மையங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.


இதுகுறித்துத் தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தபோது அளித்த தகவல்:


ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் - ஜூன் 20, 2022


விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க / அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் - ஜூலை 19, 2022.


அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சம வாய்ப்பு எண் ஒதுக்கப்படும் நாள் - 22.07.2022


சேவை மையம் வாயிலாக சான்றிதழ் சரிபார்ப்பு நாட்கள் - 20.07.2022 முதல் 31.07.2022 வரை


தர வரிசைப் பட்டியல் வெளியீடு - 08.08.2022


சேவை மையம் வாயிலாகக் குறைகளை நிவர்த்தி செய்தல்- 09.08.2022 முதல் 14.08.2022


சிறப்புக் கலந்தாய்வு (இணையதள வாயிலாக)


* மாற்றுத்திறனாளி 
* முன்னாள் படை வீரர்‌ 
* விளையாட்டு 
ஆகிய 3 பிரிவினருக்கும் 16.08.2022 முதல் 18.08.2022 வரை கலந்தாய்வு


பொதுக் கலந்தாய்வு (இணையதள வாயிலாக)


* பொதுக்கல்வி 
* தொழில்முறைக் கல்வி 
* அரசுப் பள்ளி 7.5% ஒதுக்கீடு 
ஆகிய 3 பிரிவினருக்கும் 22.08.2022 முதல் 14.10.2022 வரை கலந்தாய்வு


துணைக் கலந்தாய்வு (இணையதள வாயிலாக) - 15.10.2022 & 16.10.2022


எஸ்‌.சி.ஏ காலியிடம்‌ எஸ்‌.சி. வகுப்பிற்கான கலந்தாய்வு (இணையதள வாயிலாக) - 17.10.2022 & 18.10.2022


கலந்தாய்வு இறுதி நாள் - 18.10.2022 




கலந்தாய்வு முடிந்து 7 நாட்களுக்குள் மாணவர்கள் முன்வைப்புத் தொகையைச் செலுத்த வேண்டும். அதற்குள் தொகையைச் செலுத்தாவிட்டால், 2ஆம் கட்ட முன்னுரிமை கோரியுள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விரைவில் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா


சென்ற ஆண்டு வசூலிக்கப்பட்ட அதே கட்டணமே, இந்த ஆண்டும் பொறியியல் படிப்புகளுக்கு வசூலிக்கப்படும். கொரோனா காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா நடைபெறத் தாமதம் ஆகியுள்ளது. விரைவில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறும்’’. 


இவ்வாறு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண