பிரபல நடிகரும் வேல்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ஐசரி கே. கணேசனுக்கு 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த கல்வியாளருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த 20 ஊக்குவிக்கும் பிரபலங்கள் என்ற தலைப்பில் தனியார் நிறுவனம் ஒன்று விருதுகளை வழங்கவுள்ளது. இந்நிலையில் கல்வி நிலையம் மூலம் பலருக்கும் ஊக்குவிக்கும் விதமாக செயல்பட்டு வரும் கே. கணேசனுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
பலன்பெறும் நடிகர் ஐசரி வேலனின் மகன் தான் கணேசன் என்பது பலரும் அறிந்த செய்தி. இந்திய மட்டுமின்றி லண்டன் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் கே.கணேசனின் வேல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

It’s an honour to be recognized as one of the 20 people who inspire India and to receive the Education Iconic Award for the year 2021.
I extend my sincere gratitude to my students, faculty members, alumni, and staff of VELS Group of Institutions in India, Singapore, and UK.#VELS pic.twitter.com/TKC8BB7wMI
— Dr Ishari K Ganesh (@IshariKGanesh) April 9, 2021

இந்த நிகழ்வு குறித்து கணேசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தனக்கு இந்த விருது கிடைத்ததை எண்ணி மிகவும் பெருமைகொள்வதாகவும், தனது மனமார்ந்த நன்றிகளை தனது கல்விநிறுவன மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் கூறியுள்ளார்.