தமிழகத்தில் பள்ளிகளுக்கு செல்லாத குழந்தைகள், படிப்பை பாதியில் நிறுத்தும் குழந்தைகளை கண்டறிய ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது. அவ்வாறு கண்டறியப்படும் குழந்தைகளுக்கு இணைப்பு மையங்களில் பயிற்சி அளித்து, மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இதன்மூலம் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்கள் மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.


அதேநேரம் அந்த மாணவர்கள் ஒருசில மாதங்கள் பள்ளிக்கு வராமல் இருப்பதால், அவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டு விடும். அதிலும் 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறும் நிலை எற்படும். இதை தடுக்கும் வகையில் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களை தினமும் கண்காணிக்கும் வகையில் தமிழக அரசு புதிய முயற்சியை கொண்டு உள்ளது. அந்தவகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் என 3 அடுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


EPS: “அதிமுக யாருக்கும் அடிமை இல்லை; கூட்டணி இதனால்தான்...” - இபிஎஸ் திட்டவட்டம்






இதில் பள்ளி, வட்டார குழுக்கள் மாதத்துக்கு 2 முறையும், மாவட்ட அளவிலான குழு மாதத்துக்கு ஒருமுறையும் கூடி ஆய்வு செய்ய வேண்டும்.மேலும் தலைமை ஆசிரியர் தலைமையிலான பள்ளி அளவிலான குழு தினமும் மாணவர்களின் வருகையை கண்காணிக்க வேண்டும். தொடர்ச்சியாக 3 நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து ஆலோசனை வழங்கி பள்ளிக்கு அழைத்து வரவேண்டும். இந்த பள்ளி அளவிலான குழுக்களின் செயல்பாடுகளை வட்டார குழுக்களும், ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட நடவடிக்கைகளை கலெக்டர் தலைமையிலான மாவட்ட குழுவினரும் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிப்பதில் சிக்கல்... ED இடம் மருத்துவர்கள் சொன்ன விஷயம் என்ன தெரியுமா?




இதன்மூலம் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வராமல் படிப்பை பாதியில் நிறுத்துவதை தொடக்கத்திலேயே கண்டறியப்படும். இதனால் மாணவர்கள் உடனுக்குடன் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்படுவதோடு, அவர்களின் கற்றல் திறன் மேம்பட்டு கல்வி தரமும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் 3 அடுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளிகள் திறப்புக்கு பின்னர் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 100 மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வராமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த மாணவ, மாணவிகளை பள்ளி அளவிலான குழுவினர் ஆலோசனை கூறி மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண