மத்திய ஆயுதப்படைக் காவலில் காலியாக உள்ள பணிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ஆயுதப்படை காவல் அதாவது சி.ஆர்.பி.எஃப் பணிக்கான ஆட்சேர்ப்பு விவரங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பொதுவாக சி.ஆர்.பி.எஃப். என்பது மத்திய காவல் ஆயுதப்படைகளிலேயே பெரிய படையாக செயல்பட்டுவருகிறது. இந்த மத்திய ஆயுதப்படை காவல் வீரர்கள், ஏதாவது பிரச்சனையின் போது கூட்டத்தைக் கட்டுப்படுத்தல், இராணுவ அல்லது கலக தாக்குதலுக்குப் பதிலடி அளித்தல், இடதுசாரி தீவிரவாதத்தைக் கையாளுதல், பிரச்சனைக்குரியப் பகுதிகளில் இணைந்து ஒட்டுமொத்தத் தேர்தல் பாதுகாப்பு வழங்குதல், முக்கிய நபர்களுக்குப் பாதுகாப்பளித்தல் மற்றும் இயற்கைப்பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரணம் வழங்குதல் போன்ற பணிகளுக்கு ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
இந்நிலையில் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய ஆயுதப்படையில் 25,271 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித்தகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தேசிய மாணவர் படையில் (ncc) சேர்ந்து A,B,C சான்றிதழ்கள் பெற்றவர்களுக்கு தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்
தேர்வு முறை:
கணினி அடிப்படையிலான தேர்வு (CBE), உடல் தகுதி தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு
தகுதியானவர்கள்:
இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 23 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்
வயது வரம்பில் தளர்வுகள்:
SC/ST, OBC,Ex-serviceman
சம்பள விகிதம்:
(Pay scale level 3) ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை
விண்ணப்பிக்க கடைசி நாள்:
31.8.2021
விண்ணப்பிக்கும் முறை:
www.ssc.nic.in என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.