தொடக்கக்‌ கல்வி பட்டயத்‌ தேர்வெழுதிய பயிற்சி நிறுவன மாணவர்கள்‌ மற்றும்‌ தனித்தேர்வர்கள்‌ விடைத்தாட்களின்‌ நகலினை நாளை முதல் இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம் என்றும்‌ மறு கூட்டல்‌, மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்கலாம் எனவும் அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

இதுகுறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் இன்று தெரிவித்துள்ளதாவது:

’’ஆகஸ்ட்‌ 2022 தொடக்கக்‌ கல்வி பட்டயத்‌ தோவின்‌ விடைத்தாட்கள்‌ ஒளிநகல்‌ கோரி விண்ணப்பித்த தேர்வர்கள்‌ விடைத்தாட்களின்‌ ஒளிநகல்களை 26.10.2022 பிற்பகல்‌ 12 மணி முதல்‌ என்ற இணையதளத்திற்கு சென்று Notification என்பதை க்ளிக் செய்தால்‌ திரையில்‌ தோன்றும்‌ DEEE என்ற வாசகத்தினை க்ளிக் செய்து பின்னர்‌ DEE Exam August 2022 scan pdf downloading வழியாக பதிவிறக்கம்‌ ((Download) செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

Continues below advertisement

விடைத்தாட்களின்‌ நகலினை பதிவிறக்கம்‌ செய்த பிறகு மறுகூட்டல்‌ - II (Retotalling-II) / மறுமதிப்பீட்டிற்கு (Revaluation) விண்ணப்பிக்க விரும்பினால்‌ இதே இணையதள முகவரியில்‌ Revalution/ Retotal - Il application form DEEE என்ற தலைப்பினை க்ளிக் செய்து வெற்று விண்ணப்பப்‌ படிவத்தினை பதிவிறக்கம்‌ செய்து கொள்ள வேண்டும்‌. 

இந்த விண்ணப்பப்‌ படிவத்தினை பூர்த்தி செய்து, விண்ணப்பத்துடன்‌ அதில்‌ குறிப்பிட்டுள்ள கட்டணத்‌ தொகையை கீழே குறிப்பிட்ட நாட்களில்‌ சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர்‌ கல்வி மற்றும்‌ பயிற்சி நிறுவனங்களில்‌ நேரடியாக செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.

விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்‌: 27.10.2022 முதல்‌ 28.10.2022 வரை

தேர்வர் வகை

விடைத்தாளின்‌ மறு கூட்டல் - 11க்கு விண்ணப்பிப்பவர்கள் 

கட்டணம்ஒரு பாடத்திற்கு ரூ.205/- செலுத்த வேண்டும்‌. 

கட்டணம் செலுத்தும் இடம் 

தேர்வர் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில்‌ அமைந்திருக்கும்‌ மாவட்ட ஆசிரிய கல்வி மற்றும்‌ பயிற்சி நிறுவனத்தில்‌ உரிய கட்டணம்‌ செலுத்திவிண்ணப்பிக்க வேண்டும்‌.

தேர்வர் வகைவிடைத்தாளின்‌ மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள்‌

கட்டணம்ஒரு பாடத்திற்கு ரூ.505/- செலுத்த வேண்டும்‌.

கட்டணம் செலுத்தும் இடம் 

தேர்வர் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில்‌ அமைந்திருக்கும்‌ மாவட்ட ஆசிரிய கல்வி மற்றும்‌ பயிற்சி நிறுவனத்தில்‌ உரிய கட்டணம்‌ செலுத்திவிண்ணப்பிக்க வேண்டும்‌’’.

இவ்வாறு அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாம்:

Temporary Teachers: 2,760 தற்காலிக ஆசிரியர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்கிய அரசு: முழு விவரம் இதோ இங்கே.. https://tamil.abplive.com/education/govt-extends-tenure-to-2-760-temporary-teachers-n-school-education-full-details-80895/amp

TNPSC Exam Results: இன்னும் சில நாட்களில் குரூப் 2 , 2ஏ தேர்வு முடிவுகள்..! டி.என்.பி.எஸ்.சி அளித்த தகவல்..