அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் 10, 371 காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை செப்டம்பரில் வெளியிடப்படும் எனவும் டிசம்பரில் தேர்வு நடைபெறும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   




அந்த அறிவிப்பு குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  அதை பார்க்கலாம்.


முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் (2407) பணியிடங்களுக்கு தேர்வு நடந்து முடிந்த நிலையில், அதற்கான முடிவும் வெளியிடப்பட்டது.   


ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலம் முடிவடைந்த நிலையில், தேர்வானது ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


SCERT விரிவுரையாளர் (155)  தேர்விற்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்வு வரும் அக்டோபர் மாதம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


பட்டதாரி ஆசிரியர்கள் தேர்விற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான தேர்வு வரும் டிசம்பர் மாதம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. 


இடைநிலை ஆசிரியர்கள் (3987) தேர்விற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்வானது செப்டம்பர் மாதம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசியர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


அரசு பாலிடெக்னிக்  கல்லூரிகளில் விரிவுரையாளர்கள்  பணியிடங்களுக்கான  (493) அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


அரசு பொறியியல் கல்லூரிகளில் துணை பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


 




Chennai Rain : வீட்டுக்கு கிளம்பணுமா? உடனே ப்ளான் பண்ணிக்கோங்க.. சென்னையில் இந்த இடங்களில் இதுவரை மழை


Volvo XC40 Recharge: 408hp பவர், சிங்கிள் சார்ஜில் 418 கிலோமீட்டர்கள்.. மிரட்ட வருகிறது வால்வோ XC40 ரீசார்ஜ்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண