நாள்: 06.07.2022
நல்ல நேரம் :
காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை
மாலை 5.30 மணி முதல் 6.00 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை
மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை
இராகு :
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
குளிகை :
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
எமகண்டம் :
காலை 7.30 மணி முதல் மாலை 9.00 மணி வரை
சூலம் –வடக்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, நீங்கள் எடுத்த முயற்சியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பும் முன்னேற்றமும் காணப்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.உங்கள் பணிகளை திறமையாக கையாள்வீர்கள். புதிய வாய்ப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்கள் முயற்சிகளுக்கு உரிய அங்கீகாரம் பெருவீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, இன்று திருப்தியற்ற குழப்பமான மனநிலையில் காணப்படுவீர்கள். அதனால் உரிய முயற்சிகள் எடுப்பது கடினமாக இருக்கும். தியானம் மேற்கொள்வது நல்லது. அதிகப் பணிகள் காணப்படும். முறையாக திட்டமிட்டால் குறித்தநேரத்தில் பணிகளை முடிக்கலாம்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, இன்றைய நாள் சிறப்பாக இருக்காது. ஆன்மீகம் தொடர்பான பயணங்கள் நல்லது. இது அமைதியையம் ஆறுதலையும் தரும்.இன்று பணிகள் சலிப்பைத் தரும். கூடுதல் பொறுப்புகள் ஏற்க வேண்டியிருக்கும். உங்கள் பணிக்கு பாராட்டும் அங்கீகாரமும் கிடைப்பது கடினம்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, இன்று சாதகமான நாளாக இருக்கும். உங்கள் நெருங்கிய நண்பர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய மனிதர்களை சந்திப்பீர்கள்.இன்று பண வரவு காணப்படும். சேமிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, இன்று ஆற்றலும் தன்னம்பிக்கையும் குறைந்து காணப்படும். இந்த மன நிலை உங்கள் வளர்ச்சியை பாதிக்கும். உங்களிடம் தனிமை உணர்வு காணப்படும். இன்று எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு எதிராக அமையும்.உங்கள் நிதிநிலைமை திருப்திகரமாக இருக்காது. உங்கள் பணத்தை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, இன்று நீங்கள் பதட்டத்துடன் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். உணர்ச்சி வசப்படாமல் அமைதியைப் பராமரித்தால் நற்பலன்களைக் காணலாம்.தெய்வீக இசை கேட்பது ஆறுதல் தரும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். நிதிநிலைமை இழுபறியாக இருக்கும். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் உங்கள் நிதிநிலையை கண்காணிக்க வேண்டும்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, இன்றைய நாள் துடிப்பாக இருக்கும். உங்கள் நம்பிக்கை நிறைந்து காணப்படும். எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவுகள் இன்று எடுக்கலாம்.பணியிடத்தில் சமூகமான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும்.இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே,இன்று நம்பிக்கை உணர்வுடன் காணப்படுவீர்கள். உங்கள் முயற்சிக்கான பலனைப் பெறுவீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். பணியிடச்சூழல் சீராக இருக்கும். புத்திசாலித்தனத்துடன் நீங்கள் செய்யும் முயற்சிகளில் உங்கள் நன்மதிப்பு உயரும்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, இன்று சிறப்பான நாளாக இருக்கும். எதிர்ப்பாராத நன்மைகள் இன்று காணப்படும். இது உங்களுக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் அளிக்கும். விருந்தினர்களின் வருகை உற்சாகத்தை அளிக்கும்.பணியிடச் சூழல் இனிமையாக இருக்கும். உற்சாகமான வாய்ப்புகள் காணப்படும். பணியைப் பொருத்தவரை இன்று சிறப்பான நாள்.
மகரம் :
மகர ராசி நேயர்களே, இன்று நீங்கள் வருத்தத்துடன் காணப்படுவீர்கள். உணர்ச்சிவசப்படாமல் உங்களை நீங்கள் அமைதியாக வைத்திருங்கள். இனிமையான இசையைக் கேட்பதன் மூலம் மன ஆறுதல் பெறலாம். குடும்பத்திற்காக அதிகம் செலவழிக்க நேரும். அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக நிதிநிலைமையை சாதுர்யமாக கையாள்வது கடினமாக இருக்கும்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, இன்று எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறாது. கவனமாக மற்றும் உறுதியுடன் உங்கள் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். தெய்வீகப் பாடல்கள் மற்றும் ஸ்லோகங்கள் சொல்வது நல்ல பலனைத் தரும்.பணியிடத்தில் விவேகத்துடன் செயலாற்றினால் வெற்றி நிச்சயம். சக பணியாளர்களிடமிருந்து தொல்லைகள் ஏற்படலாம்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, இன்று நல்ல பலன்கள் தரும் சிறப்பான நாள். விட்டுக்கொடுப்பதன் மூலம் நன்மை கிடைக்கும். இன்று நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.இன்று பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். சக பணியாளர்களின் ஆதரவு திருப்தியை அளிக்கும். பணி நிமித்தமான பயணங்கள் காணப்படும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்