நாடு முழுவதும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் முதுகலைப் படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு க்யூட் தேர்வு என்று அழைக்கப்படுகிறது.
மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் நடத்தப்படும் இளங்கலை படிப்புகளில் சேர பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு (Common University Entrance Test - CUET) கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. முதுநிலைப் படிப்புகளுக்கும் க்யூட் தேர்வு நடத்தப்படுகிறது.
மார்ச் மாதம் நடைபெற உள்ள க்யூட் முதுகலைத் தேர்வுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
தேர்வு எப்போது?
மார்ச் 13 முதல் 31ஆம் தேதி வரை க்யூட் முதுகலைத் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வர்கள் இந்தத் தேர்வை எழுத பிப்ரவரி 1ஆம் தேதி இரவு 11.50 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த பிப்ரவரி 2ஆம் தேதி இரவு 11.50 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கணினி வழியில் தேர்வு நடைபெற உள்ளது. 90 நிமிடங்களுக்குத் தேர்வு நடக்க உள்ளது. இதில் 75 கேள்விகள் கேட்கப்படும்.
க்யூட் முதுகலைத் தேர்வு குறித்த விவரங்களை முழுமையாகக் காண: https://exams.nta.ac.in/CUET-PG/images/faqs-cuet-pg.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.
அதிகம் கேட்கப்படக் கூடிய கேள்விகள் குறித்த தகவல்களை https://exams.nta.ac.in/CUET-PG/images/faqs-cuet-pg.pdf என்ற இணைப்பில் காணலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://cuetpg.ntaonline.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ஆன்லைனில் போதிய விவரங்களை உள்ளிட்டு, முன்பதிவு செய்யவும்.
விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
தொடர்ந்து விண்ணப்ப எண், கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளிட்டு, உள் நுழையலாம்.
கூடுதல் தகவல்களுக்கு: https://exams.nta.ac.in/CUET-PG