தை அமாவாசை தினதமிழர்களின் கலாச்சரத்தில் முக்கிய நிகழ்வாக இருக்கிறது. இந்த நாள் எதற்காக அனுசரிக்கப்படுகிறது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
ஒவ்வொரு மாதம் வரக்கூடிய அமாவாசை தினம் உட்பட மஹாளய அமாவாசை, ஆடி அமாவாசை போன்று அனைத்து நாட்களிலும் மறைந்த முன்னோர்களுக்காக விரதம் இருந்து வழிபாடு செய்வது வழக்கமாகும். இதில் தை அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக உள்ளது .
தை அமாவாசை:
தை அமாவாசை என்பது முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் நாளாக கருதப்படுகிறது. இறந்தவர்களின் ஆன்மாக்கள் பூமியில் உள்ள தங்கள் உறவினர்களை ஆசிர்வாதிப்பதாக என்கிற நம்பிக்கை உள்ளது.
இந்த நாளன்று பித்ரு உலகத்தில் இருந்து வரக்கூடிய முன்னோர்கள் 6 மாதங்கள் உலகத்தில் தங்கியிருப்பதாகவும், தை அமாவாசை அன்று நாம் கொடுக்கும் தர்ப்பணத்தை ஏற்றுக்கொண்டு ஆசிர்வதித்து மீண்டும் செல்வார்கள் என்றும் இது மட்டுமில்லாமல் நாம் செய்த பாவங்கள் அனைத்து தீரும் என்கிற நம்பிக்கையும் உள்ளது.
அன்றைய தினம் பக்தர்கள் புனித நீராடி அன்றைய நாளை தொடங்குகின்றனர். அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ஆற்றங்கரையோரம் மற்றும் கடற்கரை பகுதிகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
இதையும் படிங்க: Thai Amavasai 2025: தை அமாவாசை எப்போது? முக்கியத்துவம் என்ன? விவரம் இதோ!
இராமேஸ்வரம் செல்லக் காரணம்?
தை அமாவாசை அன்று தங்களின் மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பதற்காக இராமேஸ்வரத்திற்கு மக்கள் அதிகம் செல்வார்கள். ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் நகரிக் அமைந்துள்ள இராமநாதசுவாமி கோவில் தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படுகிறது. இங்கு உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்கள் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு ஆசீர்வாதம் வழங்குவார்கள் என்று நம்பப்படுகிறது.
தை அமாவாசை முன்னிட்டு இராமேஸ்வரத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய பகுதிகளில் இருந்து இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மட்டுமன்றி ஹரித்வார், பிரயாக் திரிவேணி சங்கம், மற்றும் கன்னியாகுமரி போன்ற புனிதத் தலங்களுக்கு இந்த சடங்குகளைச் செய்ய பக்தர்கள் குவிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திதி கொடுக்கும் நேரம்:
தை அமாவாசை 2025 தேதி: 29 ஜனவரி 2025, புதன்கிழமை
அமாவாசை திதி ஆரம்பம்: 07:35 PM, 28 ஜனவரி 2025
அமாவாசை திதி முடியும்: 06:05 PM, 29 ஜனவரி 2025