2023ஆம் ஆண்டுக்கான இளநிலை படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வின்(க்யூட் தேர்வு) முதல் ஷிஃப்ட் இன்று (மே 21 ஆம் தேதி) தொடங்கி, நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்வை 447 தேர்வு மையங்களில் மாணவர்கள் எழுதினர்.


நாடு முழுவதும் 250 மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையை நடத்த உள்ளன. 64,35,050 தாள்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன.  


2023 ஆம் ஆண்டுக்கான இளநிலை படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு (க்யூட் தேர்வு) இன்று (மே 21 ஆம் தேதி) தொடங்கி உள்ளது. இந்தத் தேர்வு இன்று முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து ஜூன் 5,6 ஆகிய தேதிகளிலும் தேர்வு நடைபெற உள்ளது. இவர்களுக்கான ஹால் டிக்கெட் மே 19ஆம் தேதி வெளியானது. எனினும் ஜம்மு, காஷ்மீரில் மட்டும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கான தேர்வுகள் மே 26 முதல் நடைபெற உள்ளன. 


மாணவர்கள் ஹால் டிக்கெட் மற்றும் அடையாளச் சான்றிதழைக் கொண்டு தேர்வை எழுதச் சென்றனர். இதேபோல் முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு 2023 ஆம் ஆண்டு ஜூன் 2 மற்றும் 3வது வாரத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இளநிலைத் தேர்வு கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது என்று ஏற்கெனவே யுஜிசி தெரிவித்து இருந்தது. மாணவர் சேர்க்கைக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. 3 ஸ்லாட்டுகளில் இந்தத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 


இந்த நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான இளநிலை படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வின்(க்யூட் தேர்வு) முதல் ஷிஃப்ட் இன்று (மே 21 ஆம் தேதி) தொடங்கி, நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 271 நகரங்களில் 447 தேர்வு மையங்களில் மாணவர்கள் எழுதினர். முதல் ஷிஃப்ட்டை 87,879 மாணவர்கள் எழுதினர். 


3 ஷிஃப்டுகளில் தேர்வு


முதல் ஸ்லாட் 3 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு நடைபெற்றது. 2ஆவது ஸ்லாட் 3 மணி நேரம் 45 நிமிடங்களுக்கு நடைபெற உள்ளது. 3ஆவது ஸ்லாட் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. 


இந்த ஆண்டு மொத்தமாக 16.85 லட்சம் மாணவர்கள் தேர்வெழுத விண்ணப்பித்தனர். இதில் 14.99 லட்சம் மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தினர். இதில் 6.51 லட்சம் பேர் மாணவிகள் ஆவர். இந்தியா மற்றும் வெளிநாடு முழுவதும் 295 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது. 


மதிப்பெண்கள் எப்படி?


ஒவ்வொரு சரியான விடைக்கும் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடைக்கு 1 தவறான விடை அளிக்கப்படும். விடை அளிக்கப்படாத கேள்விகளுக்கு மதிப்பெண்கள் எதுவும் வழங்கப்படாது


தொலைபேசி எண்கள்: 011 - 40759000 / 011 - 69227700
இ-மெயில் முகவரி: cuet-ug@nta.ac.in


கூடுதல் தகவல்களுக்கு: www.nta.ac.in மற்றும் https://cuet.samarth.ac.in/