CUET PG Datesheet 2025: தேசியத் தேர்வுகள் முகமை, முதுகலைப் படிப்புகளுக்கான க்யூட் தேர்வு எனப்படும் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு தேதிகளை அறிவித்துள்ளது.
முன்னதாக ஜனவரி 2 முதல் பிப்ரவரி 8ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பப் பதிவு நடைபெற்றது. கணினி வழியில் இதற்கான நுழைவுத் தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 1 வரை நடைபெற உள்ளது. அதேபோல தேர்வு தேதிகள், தேர்வு நாள் விதிமுறைகள் மற்றும் பிற முக்கிய விதிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வு நடைபெறுவது எப்படி?
க்யூட் நுழைவுத் தேர்வு 90 நிமிடங்களுக்கு நடைபெற உள்ளது. 157 பாடங்களுக்கு 3 ஷிஃப்டுகளாக இந்தத் தேர்வு நடைபெறுகிறது. மொத்தம் 4,12,024 தேர்வர்கள் க்யூட் முதுகலைத் தேர்வை எழுத உள்ளனர்.
தேர்வர்கள் பாட வாரியான அட்டவணையைக் காண https://exams.nta.ac.in/CUET-PG/images/hindi-public-notice-schedule-date-sheet-for-the-common-university-entrance-test-cuet-pg-2025.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
தேர்வு மொழி என்ன?
கீழே குறிப்பிட்டுள்ள பாடங்களைத் தவிர பிற க்யூட் முதுகலைப் படிப்புக்கான வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே இருக்கும்.
- மொழித் தாள்கள் - அந்தந்த மொழிக்கேற்ப.
- எம்டெக்/உயர் அறிவியல் தாள்கள் - ஆங்கிலம் மட்டும்.
- ஆச்சார்யா தாள்கள் - சமஸ்கிருதம் மட்டும், இந்திய அறிவு அமைப்பு மற்றும் பௌத்த தரிசனம் தவிர, அவை மும்மொழியில் (இந்தி/சமஸ்கிருதம்/ஆங்கிலம்) இருக்கும்.
- இந்து ஆய்வுகள் - இந்தி மற்றும் ஆங்கிலம்.
தேர்வு மையம் எங்கே?
தேர்வு மையங்கள் உள்ளிட்ட விவரம் தேர்வு தேதிக்கு 10 நாட்கள் முன்னதாக, தேசியத் தேர்வுகள் முகமை இணையதளத்தில் வெளியிடப்படும்.
கூடுதல் தகவல்களுக்கு: தொலைபேசி எண்கள்: 011-40759000 / 011-69227700
இ- மெயில் முகவரி: helpdesk-cuetpg@nta.ac.in
லேட்டஸ்ட் தகவல்களுக்குத் தேர்வர்கள் nta.ac.in மற்றும் exams.nta.ac.in/CUET-PG/ ஆகிய இணைய தளங்களை அணுக வேண்டும் என்றும் தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.