க்யூட் எனப்படும் முதுகலை பொது நுழைவுத் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி தேர்வுகள் ஜூன் 5, 6, 7, 8, 9, 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன என்று யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார். 


கூடுதல் தகவல்களுக்கு: http://nta.ac.in மற்றும் https://cuet.nta.nic.in  ஆகிய இணைப்புகளை க்ளிக் செய்து காணலாம். 


மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டது. அதே நேரத்தில் மாநில அரசின் கீழ் செயல்படும்  பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் க்யூட் நுழைவுத் தேர்வைப் பின்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும் முதுகலை படிப்புக்கு நுழைவுத் தேர்வு இதுவரை கட்டாயம் ஆக்கப்படவில்லை.


இளங்கலைத் தேர்வு எப்போது?


இந்த சூழலில், மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில்  2023-24ஆம் கல்வி ஆண்டுக்கானமுதுகலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET) ஜூன் மாதம் 1 முதல் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூலையில் வெளியாக உள்ளன. ஆகஸ்ட் 1 முதல் புதிய கல்வியாண்டைத் தொடங்கலாம் என்று பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஜூனிலேயே முதுகலைத் தேர்வு


க்யூட் எனப்படும் முதுகலை பொது நுழைவுத் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி தேர்வுகள் ஜூன் 5, 6, 7, 8, 9, 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன என்று யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 


கணினி முறையில் சுமார் 20 பாடங்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்த உள்ளது. நாடு முழுவதும் 547 நகரங்களிலும் இந்தியாவுக்கு வெளியே 13 நகரங்களிலும் க்யூட் தேர்வுக்காகத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 


தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?


* தேர்வர்கள் cuet.nta.nic.in என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்ய வேண்டும். 


* CUET registration link என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


* பெயர், இ-மெயில் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை உள்ளிடவும். 


* பதிவு செய்ததும் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி லாகின் செய்யவும். 


* விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும். 


* விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, சமர்ப்பிக்கவும். 


மே 6 முதல் 8ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்றும் என்டிஏ தெரிவித்துள்ளது.


தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பின்படி இதுவரை 142 பல்கலைக்கழகங்கள் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கையை நடத்தப் பதிவு செய்துள்ளன. எனினும் இளங்கலைப் படிப்புகளுக்குப் போல, முதுகலைப் படிப்புகளுக்கு க்யூ நுழைவுத் தேர்வு இதுவரை கட்டாயமாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.