சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தகுதியும் விருப்பமும் வாய்ந்த தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


அரசு கொண்டு வந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராக 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராக 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலும் பணிபுரியலாம். தேர்ச்சி பெறுவோர், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதய வித்யாலயா பள்ளிகள், மத்திய திபெத்தியன் பள்ளிகளில் சேர்ந்து பணிபுரியலாம். 


ஜூலை 7ஆம் தேதி தேர்வு


19ஆவது பதிப்பைக் காணும், 2024ஆம் ஆண்டுக்கான சிடெட் தேர்வு நாடு முழுவதும் ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 2ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம். 


நாடு முழுவதும் 20 மொழிகளில் 135 நகரங்களில் தேர்வு நடைபெற உள்ளது. விரைவில் தேர்வு குறித்த விவரங்கள், பாடத்திட்டம், மொழி, தகுதி, தேர்வுக் கட்டணம், தேர்வு மையக்கள் மற்றும் முக்கியத் தேதிகள் உள்ளிட்ட விவரங்கள்,  https://ctet.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. 


கட்டணம் எவ்வளவு?


தேசிய தகுதித் தேர்வை எழுத பொதுப் பிரிவினர், ஓபிசி பிரிவினருக்கு ஒரு தாளுக்கு ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ரூ.1200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுவே எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு முறையே ரூ.500 கட்டணமாகவும் ரூ.600 கட்டணமாகவும் பெறப்பட உள்ளது.


விண்ணப்பிப்பது எப்படி?


* தேர்வர்கள் https://ctet.nic.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


* அல்லது https://examinationservices.nic.in/examsysctet/Root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFfEytN2I3LFrLvNrMJcZJNlCCcscwykbysLsSXnWv0wO என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம். அதில் விண்ணப்ப எண், பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட்டு விண்ணப்பிக்கலாம்.


* முதல்முறை விண்ணப்பிப்பவர்கள், முன்பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம். 


முழுமையான கையேட்டுக்கு தேர்வர்கள் https://cdnbbsr.s3waas.gov.in/s3443dec3062d0286986e21dc0631734c9/uploads/2024/03/2024030749.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


* வேறு ஏதேனும் தகவல்களைப் பெற விரும்பினால் https://ctet.nic.in என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.