சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் கூட்டு நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பப் பதிவும் தொடங்கி உள்ளது. இதற்குத் தேர்வர்கள் மே 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியா முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகை பெறவும் உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கும் பிஎச்.டி. படிப்பில் சேரவும் சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் கூட்டு நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.


ஜூனில் தேர்வு


இந்த நிலையில் இந்த ஆண்டு சிஎஸ்ஐஆர் யுஜிசி நுழைவுத் தேர்வு ஜூன் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 180 நிமிடங்களுக்கு எம்சிக்யூ முறையில் தேர்வு நடைபெற உள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் இந்தத் தேர்வு நடைபெற்று வருகிறது.


விண்ணப்பப் பதிவு மே 1ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், 21ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோலத் தேர்வர்கள் மே 25 முதல் 27ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்.


என்னென்ன தாள்களுக்குத் தேர்வு?


* வேதியியல் அறிவியல் (Chemical Sciences )


* பூமி, வளிமண்டலம், பெருங்கடல் மற்றும் கிரக அறிவியல் (Earth, Atmospheric, Ocean and Planetary Sciences)


* வாழ்க்கை அறிவியல் (Life Sciences )


* கணித அறிவியல் (Mathematical Sciences)


* இயற்பியல் அறிவியல் (Physical Sciences)


ஒரு விண்ணப்பப் படிவம் மட்டுமே..!


ஒரு தேர்வர் ஒரு விண்ணப்பப் படிவத்தை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட படிவங்களைப் பூர்த்தி செய்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 


சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் கூட்டு நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்னர், தகுதி உள்ளிட்டவற்றை கவனமாகப் படித்துக்கொள்ள வேண்டும். தேர்வுக் கட்டணத்தை டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது யுபிஐ முலம் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.


இ – மெயில் முகவரி, மொபைல் எண்ணைச் சரிபார்க்க வேண்டும்


விண்ணப்பிக்கும் முன்னால், தேர்வர்கள் தங்களின் இ – மெயில் முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை சரியாக உள்ளிட்டிருக்க வேண்டும். ஏனெனில் தேசியத் தேர்வு முகமை, இ- மெயில் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்குக் குறுஞ்செய்தி ஆகியவற்றின் மூலம் மட்டுமே தகவல்களைத் தெரிவிக்கும்.


கூடுதல் தகவல்களுக்கு: https://csirnet.nta.ac.in/images/Public_Notice_Joint_CSIR_UGC_NET_June_2024_Opening_of_Application_Form.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.


முழுமையான விவரங்களை அறிய: https://csirnet.nta.ac.in , www.nta.ac.in


தொலைபேசி எண்கள்: 011-40759000 அல்லது 011-69227700


இ- மெயில் முகவரி: csirnet@nta.ac.in